Thursday 27 January 2022

உரையா உடையா?

இந்தியக் குடியரசு தினம் முடிந்து விட்டது.

இந்திய ஒன்றியத்தின் முதன்மை மந்திரியின் தொப்பியும் சால்வையும் அனைவரையும் ஈர்த்தது என்று செய்திகள் சொல்லுகின்றன.

உத்தரகாண்ட் மாநிலத்தின் பாரம்பரிய தொப்பியையும், மணிப்பூர் சால்வையையும் அணிந்திருந்தார். 

இரண்டு மாநிலங்களில் தேர்தல் இல்லையென்றால் எந்த ஊர் தொப்பியை அணிந்திருப்பார் என்று தெரியவில்லை.

இந்தியக் குடியரசு தினத்தை தனது தேர்தல் பிரச்சாரத்திற்காக ஆட்சியாளர் பயன்படுத்துவது இந்திய தேசத்தின் குடியரசை சிறுமைப்படுத்துவது ஆகாதா?

இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது?

ஆட்சியாளரின்

உரைதான் மக்களை ஈர்க்க வேண்டும்

உடையல்ல ...

ஒருவேளை

டெலிப்ராம்டார் தப்பலாம்

உடை தப்பாது என்பதாலும் இருக்கலாம்!