Monday 11 March 2024

தேங்கிக் கிடந்தாலும் நன்மை செய்க - 12 மார்ச் 2024 - நற்செய்தி


தேங்கிக் கிடந்தாலும் நன்மை செய்க


இன்றைய முதல் வாசகம்இந்த ஆறு பாயுமிடமெல்லாம் திரளான உயிரினங்கள் வாழும். ஏராளமான மீன்கள் இருக்கும்என்கிறது

இன்றைய நற்செய்தி, தண்ணீர் தேங்கி நிற்கும் ஐந்து மண்டபங்கள் கொண்ட குளம் ஒன்றைப் பற்றிப் பேசுகின்றது. தண்ணீர் கலங்கும்போது ஒருவர் மட்டுமே குணமடைய முடியும். உண்மைதான் தேங்கி நிற்கும் குளத்தில் அதிகம் பேர் நன்மை அடைவது கிடையாது. அதில் கிடைக்கும் நன்மையை விட ஊரெல்லாம் விரிந்து பாயும் ஆற்றின் நன்மை பல மடங்கு பெரிது

இயேசு தேங்கி நிற்கும் குட்டையல்ல. நன்மை செய்வதற்கென்றே ஊற்றெடுத்த ஆறு. எங்கும் பாய்ந்து பலரையும் குணமாக்கும் ஆற்றல் பெற்ற ஆறு. ஆறாய்ப் பாயும் இயேசுவிடமிருந்து வரும் ஆற்றல் பலரையும் குணமாக்கும்

இயேசுவைப் பின்பற்றும் நாம் ஓரிடத்தில் தேங்கி நிற்கும் குட்டையைப் போலில்லாமல், ஊரெல்லாம் சென்று திரளான உயிரினங்களை வாழ வைக்கும் ஆறாக இருக்க அழைக்கப்படுகின்றோம்

நம்மிடம் இயேசுவைப் போல ஆறாய்ப் பாய்ந்து பெரும் நன்மை செய்யும் ஆற்றல் இல்லாவிட்டாலும், ஓரளவுக்காவது நன்மை செய்ய முற்படுவோம். அப்படியும் இயலாதெனில், சிறிதளவு நன்மை செய்யும் குளமாய்  இருக்கலாமே  என்பதே இன்றைய நற்செய்தி.