Showing posts with label Justice. Show all posts
Showing posts with label Justice. Show all posts

Thursday, 28 June 2018

India - The Most Dangerous Country for Women

I was shocked to read that India is the most dangerous country for women in the world. for the first time USA has also made an appearance in the list of 10.

We need to become the topper in the list of the safest countries for women in the world.

We have to remember that we all had been given a chance to see this beautiful world, because of the love of one woman - Mother.

If we often remind ourselves of that, probably we can make this place the safest place for them.

Read the following News:

"The survey noted that Indian government data shows reported crimes against women were up 83 percent between 2007 and 2016. During that year, there were an average of four rapes reported every hour in India." 



India gang-rape shock: Accounts emerge of brutal abuse by underager

Wednesday, 12 June 2013

"மூணு படம் நாலு விஷயம்"

ஜெர்மன் சமாச்சாரம் என்றால் நம்பி வாங்கலாம் என்று எல்லாரும் நினைப்பது உண்டு. இன்றைக்கும்  ஜெர்மன் குவாலிடி பற்றி நிறைய தம்பட்டம்  உண்டு. ஆனால் என்ன செய்வது..  தொடர்ந்து பெய்து வந்த  நீர்   ஜெர்மனியில்  அணை  உடைந்து ஊருக்குள் வந்து விட்டதாம். இயற்கையின் சக்திக்கு முன்பு எந்த தொழில் நுட்பமும் ஒன்றும் இல்லை.
இது திரு நாராயண சாமியின் கவனத்திற்கு.....



இந்தியாவும்  பாகிஸ்தானும் தொடர்ந்து அடிச்சிக்குது. ஆனால் வாரம் இருமுறை செல்லும் இரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் லக்கேஜ்ஜை ஸ்கானர் செய்யும்   இயந்திரம் பழுது ஆகி ரொம்பநாள் ஆயிடுச்சாம். என்னத்த சரி பண்ணினாலும் நடக்குறது கட்டாயம் நடக்கும்.  நடக்காதது கட்டாயம் நடக்காதுன்னு அதைச் சரி பண்ணாமலேயே விட்டுட்டாங்களாம்.


அமெரிக்காவின் 29 வயது எட்வர்ட் ஸ்நோடவுன் அமேரிக்கா எப்படி எல்லார் தலைக்கும் மேல பம்பரம் விடுதுன்னு ஹாங்காங் போய் உலகத்துக்கு எல்லாம் தெரியப் படுத்தி இருக்காரு. அதாவது இன்டர்நெட் மூலமாக எல்லாரின் கணக்குகள்  எல்லாவற்றையும், எல்லார் பேசுவதையும் ஒட்டுக் கேட்கிறதாம். அது மட்டுமல்ல மற்ற நாடுகளோடு போட்டிருக்கிற  ஒப்பந்தங்களைக் கூட சீரியசாக எடுத்துக் கொள்வது  இல்லையாம்.  உரிமை பேசுற நாட்டுல இப்படி நடக்குது... இதைக்கேட்டு ஐயையோ ஆனந்தமே ன்னு பாட்டு பாடுறத விட்டுட்டு - ஷாக் ரியாக்ஷன் குடுத்தாராம் நம்ம நாட்டு மேதை ...  இங்க அப்புடி ஒன்னும் நடக்காத மாதிரி... ஒருவேளை உண்மையா இருக்குமோ... பார்டர் விட்டு பார்டர் போற வண்டிகளையே ஒழுங்க நாம பாக்குறதில்லை இதுல போய்  யாராவது டெலிபோன  ஒட்டுக் கேப்பாங்களா என்ன?





இந்தியாவில ராஜஸ்தான் மாநிலத்தில் ஒருவருக்கு - படிக்காத படிப்புக்கு, விண்ணப்பிக்காத தேர்வுக்கு, தேர்வு எழுத மத்திய அரசுத் தேர்வாணையம் ஒபாமா புகைப்படத்தோட தேர்வு அனுமதிச்  சீட்டு வழங்கியிருக்கிறதாம்... இதக் கேட்டா ஒபாமா ஷாக் ஆவாரா மாட்டாரா...




ஏன்  இப்புடி? தொழில் நுட்பம் பல சமயங்களில் கேவலமாய் பிய்த்துக்  கொள்ளும் என்பதற்கான சமீபத்திய உதாரணங்கள் இவைகள்...





Thursday, 28 July 2011

சமச்சீர் - ஒரே தீர்வு ஓராண்டு விடுமுறை

 சமச்சீர் கல்வி வேண்டாம் என்று சொல்கிறவர்கள் முன்வைக்கிற வாதம் இரண்டுதான்.
  1. ஒன்று - அது தரம் அதிகமானதாக இருக்கிறது.
    • தரம் அதிகமானா நல்லதுதானே என்று கேட்கிற நல்லவர்களே - அவர்கள் அப்படியிருந்தும் ஏன் வேண்டாம் என்கிறார்கள் என்கிற கேள்வியையும் கேட்க வேண்டும்?
    •  அரசு பள்ளிகளில், இப்போது உள்ள படத் திட்டத்தையே ஒழுங்கா நடத்துவதற்கான அருகதை ஆசிரியர்களுக்கு இல்லை- இதுல சமச்சீர் கல்வி வேற....
    • அரசு பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லை; சில இடங்களில் போதுமான வசதிகள் இல்லை. பல அரசுப் பள்ளிகளில் கட்டிடங்களே இல்லை...
    • அரசு ஆசிரியர்கள் அதிகமா சம்பளம் வாங்கிட்டு வேலை செய்யுறது இல்லை.
    • அதனால் பஞ்சு மூட்டை தூக்குறவங்கிட்ட இரும்பு மூட்டையைக் குடுத்த வேலைக்கு ஆகுமா? 
    •  இதற்கெல்லாம் என்ன காரனம்னா ஆசிரியர்கள் தான். ஆசிரியர்கள் தேர்தலின் போது வேலை செய்வதால் அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது. ஒழுங்கா பாடம் எடுங்கன்னு சொல்லத் தயங்குது. மற்ற எல்லா அரசு அலுவலகங்களிலும் எல்லாரும் காலை முதல் மாலை வரை கடமை தவறாமல் வேலை செய்கிராகள். ஆனால் ஆசிரியர்கள் மட்டும் வேலை செய்வது இல்லை. அவர்கள் பலம் வாய்ந்தவர்கள் என்பதால் யாரு அவர்களிடம் எதுவும் சொல்ல முயலுவதில்லை. ஆனால் அவர்கள் மீது கை வைக்கத் துணிந்தவர் அம்மா மட்டும்தான்.
     2. இரண்டு - தரம் மிகவும் கேவலமாக இருக்கிறது
      • என்னா தரம் கேவலமா இருக்கு?
      • 'திடப்' பொருள்தான் உருகும் 'வாட்டர் melts ' ன்னு போட்டிருக்கு அது தப்பு -- அப்புறம் கலைஞர் ஒரு கவிஞர் னு போட்டிருக்கு. இது போல இன்னும் நிறைய..
      • நிறைய அறிவியல் உண்மைகள் போடாமல் இருக்கு - அம்மா ஒரு திரைப்படக் கலைஞர் ...
      • தனியார் பள்ளிகளில் சமச்சீர் கல்வியின் தரத்தை விட அதிகமான தரத்தில் இருக்கிறது. அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த தனியார் பள்ளிகளின் தரத்தை குறைப்பதா...
      • தனியார் பள்ளி ஆசிரியர்கள் பாதிச் சம்பளம் வாங்கிக் கொண்டு ஒழுங்காகப் பாடம் எடுக்கிறார்கள். இரும்பு தூக்குறவங்க கிட்ட பஞ்சு மூட்டை தூக்கச் சொல்றது நியாயமா? மேலும்அவர்களின் வேலையில் கைவைக்க யாரும் பயப்படுவது இல்லை என்பதனால் அவர்கள் ஒழுங்காக இருப்பார்கள். எனவே தனியார் பள்ளிகளில் நாம் தலையிடாமல் அவர்கள் விருப்பப் படி ....... நடத்த அரசு உதவ வேண்டும். எனவே சமச் சீர் கல்வி தேவையில்லை.

      அதனால் எப்படிப் பாத்தாலும் சமச் சீர் கல்வி ஒன்னும் சமமா இல்லைன்னு தெரியுது.
      என்ன செய்யனும்னா - சமச்சீர் கல்வியைத் தடை செய்யணும்.

      இதோட முடியலை - அன்பு மக்கா
      இதனால என்ன சொல்ல வர்றேன்னா

      - அரசு ஆசிரியர்கள் தரம் உயர்ந்த பாடத்தை நடத்தாமல் இருப்பதைவிட, தரம் குறைந்த பாடத்தை நடத்தாமல் இருப்பதே மேல்.

      - பணம் கொடுத்துத்தான் நாம் கல்வியைப் பெறமுடியும் - அப்போதுதான் ஒழுங்கான கல்வியைப் பெற முடியும்.

      - ஆக எது எப்படி இருந்தாலும், யார் ஆட்சிக்கு வந்தாலும், யாரும் ஒன்னும் ............ முடியாது...- இப்போது இருப்பதே இருக்கும் - எப்போதும் அப்படியே நடக்கும்.

      - மாற்றம் என்பதெல்லாம் விலங்குகள் தத்துவம்.

      இறுதியாக இதற்கு ஒரே தீர்வு ---

      அம்மா எதிர்கட்சித் தலைவியாக இருந்த போதே சமச்சீர் கல்வித் திட்டத்தை பற்றி பேசியிருக்கிறார்கள். எனவே வரலாற்றின் பதிவுகளில் அம்மாதான் சமச்சீர் கல்வியை அறிமுகப் படுத்தியதாக இருக்க வேண்டும் என்பதுதான் ஒரே குறிக்கோள். எனவே நிச்சயமாய், இது அடுத்த ஆண்டுதான்.... அம்மாவின் படத்தோடு சமச்சீர் பாடத்திட்டத்தில் அம்மா பெயர் இருக்க வேண்டும் அதுவரை நாம் காத்திருக்க வேண்டும்.

      அதற்கு...

      இரண்டு மாதங்கள் முடிந்துவிட்டது. மாதத் தேர்வுகள், மிட்-டெர்ம்  தேர்வுகள் எல்லாம் இந்நேரம் முடிந்திருக்க வேண்டும். இனிமேல் இதற்கான அவகாசமேல்லாம் கிடையாது என்பதனாலும், மாணவர்கள் சமச்சீர் கல்வியைப் பின்பற்றுவதைக் காட்டிலும், படிக்காமல் இருப்பதே மேல் என்று அரசு நினைப்பதாலும், இதைப் பற்றிய அக்கறையை, தமிழக வெகு சனம் வெளிப் படுத்தாமல் இருப்பதாலும், அரசுக்கு சரியான வழி காட்ட ஆட்கள் இல்லைஎன்று தமிழக அரசின்    வக்கீலே தனது தனிப் பட்ட கருத்தாக வெளிப் படுத்தியிருப்பதாலும், இதற்குப் பிறகும் நாம் மாணவர்களை நாம் வதைக்க முடியாது என்பதாலும், [சும்மா இருக்குறது எவ்வளவு கஷ்டம் - அதுவும் மாணவர்கள்... ] இதற்கு ஒரே தீர்வாக - ஒரு ஆண்டு விடுமுறை கொடுத்து இந்தச் செயலை அம்மா செய்ததாக வரலாற்றின் பக்கத்தில் இடம் பிடித்தால் நன்றாக இருக்கும்.


      பின்குறிப்பு:

      இக்கட்டுரையில் உண்மை பொய் இரண்டும் கலந்து இருக்கிறது. செய்தியும் கேலியும் சேர்ந்து இருக்கிறது.
      எழுதப்பட்ட கருத்தில் நீங்கள் ஏதாவது ஒன்றைக் கொண்டிருந்தால் வருந்த வேண்டாம்.
      நீங்கள் அரசு ஆசிரியராக இருந்தால் வருத்தப் பட வேண்டாம்.
      [இதெல்லாம் சும்மா ... உள்ள ஒன்னும் இல்லைங்கோ ... கோ .... கோ...]

      Saturday, 28 August 2010

      நீதித் துறை

      நீதித் துறையில் -  2 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக செய்திகள் வந்திருக்கின்றன. எத்தனை ஆண்டுகள் பிடிக்கும் இந்த வழக்குகள் முடிக்கப்பட?

      இது எல்லாருக்கும் தெரிந்ததுதான் - ஒன்று வழக்குத் தொடுத்தவன் இறக்க வேண்டும் அல்லது  வழக்கு தொடுக்கப் பட்டவன் இறக்க வேண்டும் - ஆனாலும் வாரிசுகள் வழக்கில் ஆர்வம் காட்டும் போது ஆதுவும் வாழையடி வாழையாகத் தான் தொடரும்.

      சீனாவில் ஏறக்குறைய நூறு கிலோ மீட்டர்கள் அளவிற்கு சாலையில் போக்குவரத்து ஜாம் ஆகியிருக்கிறது. இப்படி ஏறக்குறைய பத்து நாட்களாக இருக்கின்றது. சரியாக இன்னும் ஒருமாதம் ஆகும் என்று தெரிவித்து இருக்கிறார்கள். இந்த ட்ராபிக் ஜாம் இன்னும் ஒரு மாதத்தில் சரியாகி விடும் - நமது நீதித்துறை ட்ராபிக் ஜாம் ஒரு போதும் சரியாகாது.

      Saturday, 22 May 2010

      ரிலையன்ஸ் - அவ நம்பிக்கை

      ஒரே நாளில் இரு செய்திகள்:

      1. ஏறக்குறைய அறுபது கிலோமீட்டர் அளவுள்ள சாலை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இது ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி வரை. இதன்பின் 24 ஆண்டுகளுக்கு சுங்கம் வசூலித்துக் கொள்ளலாம்.
      அப்போதைய அரசியல் வாதிகளிடம் கொஞ்சம் பணம் கொடுத்தால் இன்னும் 24 ஆண்டுகள் என்ன - எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் வசூலிக்கலாம்.

      2. காலாவதியான உணவுப் பொருட்களை விற்றதற்காக கைது செய்யப்பட்ட துரைப்பாண்டி - ரிலையன்ஸ் பிரெஷ் - லிருந்து பொருட்களை வாங்கியதாகக் கூறுகிறார்.

      இந்தியப் பிரதமர் மற்றும் அரசியல் தலைவர்கள் - இன்னும் சில நண்பர்கள் சொல்லுவது போல அம்பானி மற்றும் டாடா போன்றவர்கள் இந்தியாவை முன்னேற்றுவதற்காக தொழில் செய்கிறார்கள் என்பதெல்லாம் வெறும் கோஷம். எந்த முதலாளியும் ஏமாற்றுவதைத் தான் மூலதனமாக வைக்கிறானே ஒழிய வேறு ஒன்றும் இல்லை.


      மக்கள்தான் மாற வேண்டும்.

      Thursday, 18 March 2010

      தினம் தினம் - பணம் - கருப்பு -வெள்ளை

      ஒவ்வொரு நாளும் புதிது புதியதாய் நிகழ்வுகள்: ஒன்றும் எழுத வேண்டாம் என்றுதான் நினைத்தேன்.
      எழுதி என்ன ஆகப் போகிறது? ஒன்றும் ஆகாமல் போனாலும், மௌனமாய் இருக்கிறபோது எதோ நாமும் இந்த நிலைக்கு காரணமாய் இருக்கிறோம் என்பது மட்டுமல்ல, இன்னும் நன்றாக இந்த ஊழல் பெருக வழி செய்கிறோமே என்கிற கோபத்தில் எழுதுகிறேன்.
      நீங்கள் படித்து என்ன ஆகப்போகிறது?
      இதைப்பற்றி கண்டுகொள்ளாமல் இருந்தால் இந்த ஊழல் பெருக நீங்களும்தான் காரணிகள்: நானும்தான்.

      சரி எதைப்பற்றி எழுவது? - பணம்.

      பணம் - பணத்தின் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது.
      பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே இருக்கின்றது.
      இருந்தாலும் வாங்கும் சக்தி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்று மகிழ்ச்சி அடையலாம் என்று ஒரு சாரார் சொல்கிறார்கள்.

      காய்கறியை விட கோழிக்கறி மலிவாக இருக்கிறது.
      தாகம் எடுத்தால் பால் வாங்கிக் குடிக்கலாம், பாலின் விலை தண்ணீரை விட குறைவாக இருக்கிறது.
      ஒருவேளை பூவின் [மலர்கள்] விலையும் அதிகரித்து பணம் மலிவாகக் கிடைக்கிறதோ என்பதுதான் எனக்குள்ள சந்தேகமே?

      மாயாவதிக்கு பண மாலை கிடைத்ததே அதைத்தான் சொல்கிறேன். முதலில் ஒரு கோடி-க்கு 1000 ரூபாய் நோட்டில் மாலை என்றார்கள், பிறகு, 2 கோடி, இப்போது 20 கோடி என்பது வரை வந்து நிற்கிறது.

      பணத்தின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது இருக்கட்டும் - அதற்காக அதை ஏதோ தோட்டத்தில் காய்த்து தொங்குவது போலவும், அதைப் பறித்து அலங்கரிப்பது போலவும் செய்வது ரொம்பக் கொடுமைப்பா.
      "என்ன இங்க பணம் காய்ச்சுத் தொங்குதுன்னு" நினைச்சியா என்று பெற்றோர்கள் கேட்பார்கள். ஒருவேளை அவர்களுக்கு அதைக் காய்க்கவைக்கிற வித்தை தெரியவில்லையோ என்னோவோ.

      பணத்தை வைத்து மாலை இயற்றுவது இந்த நாட்டின் அவமானமா - பெருமையா என்பது தெரியவில்லை. ஒருவேளை மாயாவதி அம்மையார், இந்திய ஒருமைப்பாட்டின் மீது நம்பிக்கை இல்லாமல் அதனைக் கேலி செய்வதற்காக இது போல செய்திருக்கலாமோ என்னவோ. ஒரு நாட்டைக் கேவலப்படுத்த அந்த நாட்டில் குண்டெல்லாம் போடவேண்டியதில்லை. தேசியக் கோடியை கிழித்தாலே போதுமானது. அரசியல் வாதிலே அதையெல்லாம் செய்யக் கூடாது என்று சுற்றிக் கழுத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறார்.

      "என்மீது கொண்ட அன்பால் அவர்கள் செய்தார்கள்" என்று மாயாவதி அம்மையார் சொல்கிறார்.
      நாம எவ்வளவோ பேரைப் பார்த்துட்டோம் - நமக்குத் தெரியாதா. தமிழ் நாட்டில் இது போல அன்பால் செய்தார்களியும் பார்த்துட்டோம் - வெளிநாடுகளில் இருந்து காசோலை மூலமாக அன்பு செய்வதையும் பார்த்திருக்கிறோம்.

      கருப்பை - வெள்ளையாக்கும் முயற்சி. வேறென்ன?

      இல்லையென்றால், தன்னைத்தானே பெருமைப்படுத்திக்கொள்ளும் முயற்சி. தனக்கே மாநிலம் முழுவதும் சிலை வைத்துக் கொள்வது - பெரிய மண்டபம் கட்டிக்கொள்வது - தோட்டம் அமைத்துக் கொள்வது - இப்போது பணமாலை. தன்னைத் தானே நேசிக்கும், தன்னை மட்டுமே நேசிக்கும் ஒரு இழிநிலையின் வெளிப்பாடு.

      இதை ஒரு எழுச்சியாகவும் பார்க்கலாம். மற்றவர்களுக்கு இணையான ஒரு தலைவராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் ஒரு முயற்சி என்பதற்காக இது போன்ற செயலலை செய்ய வேண்டியிருக்கிறது என்று சொல்லிக்கொள்ளலாம் - ஆனால் மாயாவதி விஷயத்தில் அதை நினைத்துப் பார்க்க முடியுமா என்று தெரியவில்லை.

      ரூபாய் நோட்டில் எழுத வேண்டாம் என்றார்கள் - பூவெல்லாம் செய்யக்கூடாது என்றும் சட்டம் இயற்ற வேண்டும் போலிருக்கிறதே.

      கோடி எரித்தால் கடும் சட்டம் - கோடி மிதித்தால் தண்டனை. தேசிய கீதம் அவமானப் படுத்தினால் சிறை. தேசிய பணம் --- என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இந்தப் பணத்தை வைத்தே இது தவறில்லை என்று சொல்ல வைக்கலாம் - யாரை வேண்டுமானாலும் விலைக்கு வாங்கலாம்...

      அது சரி - நமக்கெல்லாம் இந்தப் பணம் மலர்களை விட மலிவாகக் கிடைப்பதில்லையே அது ஏன்?

      இப்போது புதியதாய், ஒரு அரசியல் கட்சி - யோகா குரு பாபா ராம்தேவ் "ஸ்வபிமான் அபியான்" - ன்னு ஒரு கட்சி தொடங்கியிருக்காராம்.
      அட சாமிங்களா எங்கே இருந்துதான் பணம் வருதோ.

      அரசியல்வாதிகளுக்கு அச்சடித்த பணம் கசங்காமல் கிடைக்கிறது. இப்போது யோகா குருக்களுக்கு வேறு நிறையக் கிடைக்கிறது. பார்லிமெண்டில் சாக்குப்பையில் பணம் கத்தை கத்தையாய் வருகிறது.
      கிரிக்கெட்டில் பணம் புரளுகின்றது.
      I. P. L. கிரிக்கெட். இதனால் அரசுக்கு 200 கோடி வருமானமாம். - வருமான வரித்துறை மகிழ்ச்சி அடைந்திருக்கிறது. ஷாருக்கானுடன் அமர்ந்து கிரிக்கெட் பார்க்க 32,000 ரூபாயாம். என்னப்பா இது? எத்தனை கோடிகள்தான் புரளும்? உலகம் முழுக்க recession என்று சொல்கிறார்கள் - இந்தியா மட்டும் விதி விலக்கா.


      அணு உலையினால் ஆபத்து ஏற்பட்டால் வெறும் 300 கோடி கொடுத்தால் போதும் என்று கூப்பாடு போட்டு, சட்டம் இயற்றப் போகிறார்களாம். அதுக்கு மேற்பட்டு வேணும்னா நீதி மன்றத்தில் வழக்கு போட்டு வாங்கிக் கொள்ளலாம் என்று விதண்ட வாதம் வேறு. நம்ம நாட்டில தான் நிலுவையில் இருக்கிற வழக்குகள் முடியவே 300 ஆண்டுகள் ஆகுமே?
      [http://unmayapoyya.blogspot.com/2010/03/blog-post_07.html]

      இதற்குத்தான் நமது பிரதமருக்கு "World statesman award" ஆ?

      அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை - அதனருகில் ஓலைக் குடிசை -
      மூத்த தலைவர்கள் வாழ்க.

      Monday, 8 March 2010

      என்ன கொடுமை சார்?

      என்ன கொடுமை சார்?


      * மக்கள் ஏன் சில சமயம் ஆவேசப்பட்டு குற்றம் செய்தவர்களை உதைக்கமுடியாட்டியும் அவங்க படத்தையும், இருந்த இடத்தையும் ஏன் உடைக்கிறாங்கன்னு இப்பதான் புரியுது.

      * இது நம்மல நம்ப வச்சு கழுத்த அறுத்துட்டானே என்கிற கோபம் பெரிதாக இருப்பதைக்காட்டிலும், இனிமேல் மற்றவர்கள் ஏமாறக் கூடாது என்கிற நல்ல என்னத்தைக் காட்டிலும், நாம் ஏமாந்து போய்ட்டோமே என்கிற ஆதங்கத்தில்தான் மக்கள் இப்படி செயல் படுகிறார்களோ? உண்மையா?

      * இல்லாட்டி இப்படி இருக்குமோ - ஒரு வேளை, நீதித்துறை எப்ப தீர்ப்பு குடுத்து - அப்படின்னும் யோசிக்கிறாங்களோ என்னவோ யாரு கண்டா? ஏன்னா -
      எனக்கு என்னமோ அப்படிதான் தோனுது.

      இந்தியாவில் நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்க இன்னும் 300 ஆண்டுகளுக்கு மேலாகும் என்று ஒரு நீதிபதி கூறியுள்ளார். இந்த நிலைமை இருந்தா என்ன நடக்கும். யாருக்கு நீதி கிடைக்கும்?

      (நம்ம செத்த பிறகு நம்ம ஆவிக்காவது நீதி கிடைச்சா சரிதான்.)

      என்ன கொடுமை சார்?


      இதுக்கு இடையில நித்தியானந்தம் உண்மைகளை சேகரிக்கிறிராம். நம்ம நீதிபதியின் செய்தியை அவரும் படிச்சிருப்பாரோ என்னவோ.

      நித்தியானந்தா ஒரு வீடியோவில் பின்வரும் செய்தியை கூறியிருப்பதாக ஒரு நாளிதழ் சொல்கிறது.
      We are in the process of collecting evidence on the persons behind the false video footage. Very soon the truth will be unearthed and I will come before the media with necessary evidence,” he said in his 4-minute video statement.


      http://www.thehindu.com/2010/03/08/stories/2010030863841200.htm


      இதுக்கு நடுவுல இவுங்க வேற:

      சென்னை இந்து எழுச்சியை ஏற்படுத்திய இளம்ஞானி நித்யானந்தாவை பாதுகாக்க வேண்டும் என்று பால் தாக்கரேயின் சிவசேனா கட்சியின் தமிழகப் பிரிவு கூறியுள்ளது.



      என்ன கொடுமை சார்?