Showing posts with label Riots. Show all posts
Showing posts with label Riots. Show all posts

Wednesday, 26 July 2023

பிலாத்துவின் [முதலைக்] கண்ணீர்

சனிக்கிழமை இரவு 

பிலாத்து கிரேக்க மொழியில்

அழுது கொண்டே பேசினான்:

 

"இயேசுவை நிர்வாணப்படுத்தி 

சிலுவையில் அறைந்த 

வீரர்கள் என்னைக் 

கடும் வேதனைக்கும் 

கோபத்திற்கும் உள்ளாக்கியிருக்கிறார்கள்!

ஆப்பிரிக்காவாக இருந்தாலும் 

அமெரிக்காவாக இருந்தாலும் 

இஸ்ரேயாலாக இருந்தாலும் 

இது போல எதையும்  

அனுமதிக்கக் கூடாது." 

 

அவனது கிரேக்கத்தை

தமிழில் மொழி பெயர்த்து,

பிலாத்துவின் இளகிய மனம் 

குறித்து நான் பார்ப்பவர்களிடமெல்லாம் 

சிலாகித்துக் கொண்டிருக்கிறேன்.


பிலாத்து வாழ்க!