Communal Clash - A threat to secularism
Sunday, 17 August 2014
Sunday, 6 July 2014
இந்திய நர்சுகளும் தமிழக மீனவர்களும்
45 கேரள நர்சுகள் விடுவிக்கப்பட்டது குறித்து நமக்கு மிக்க மகிழ்ச்சியே. இந்திய மற்றும் தமிழகப் பத்திரிக்கைகள் எல்லாம் 46 இந்திய நர்சுகள் விடுவிப்பு என்று இந்திய ஒருமைப் பாட்டுக்கு வித்திடுகின்றனர்.
ஆனால் தினம் தினம் சாகும் மீனவர்கள் மட்டும் தமிழக மீனவர்கள்.
தமிழக மீனவர்கள் தயவு செய்து கச்சத் தீவுக்கு போகாமல் மடகாஸ்கர், ஓமான், போன்ற நாடுகளுக்கு அருகில் சென்று மீன பிடித்தால் நீங்கள் இந்திய மீனவர்கள் என்று அங்கீகரிக்கப் பட வாய்ப்பு உண்டு.
மேலும் இந்தியாவின் நீதிமன்றங்கள் கொடுக்கின்ற தீர்ப்புகளை மதிக்காமல் (முல்லைப் பெரியாறு ஆணை மற்றும் காவிரி நதி நீர்) நடந்தால் ஒருவேளை நீங்கள் இந்தியர்கள் என்று மதிக்க்கப் பாடவும் வாய்ப்பு உண்டு.
----

Friday, 30 May 2014
உள்ளே போ! ... காந்தி உள்ளே போ
எவ்வளவோ முறை மெதுவா... ..அன்பா.. நீங்க செய்யுறது தப்பு - இது சரியில்லைன்னு எத்தனயோ முறை சொல்லிப் பாத்தாச்சு - கதர் யாரும் கேக்கலை.... அதுதான் உள்ளே போ... உள்ளே போன்னு ரொம்ப சத்தமா கத்தி அனுப்பி வச்சுட்டாங்க. ரஜினி தன் தம்பியைப் பார்த்து சொல்றமாதிரி...
இந்த மக்கள் குடுத்த அடியைப் பாக்கிறப்ப இது சாதாரன அடி மாதிரி தெரியலை..."நாடி நரம்பு, ரத்தம் சதை எல்லாத்துலயும் 'வெறுப்பு' வெறி ஊறிப்போன ஒருத்தராலதான் இந்த மாதிரி அடிக்கமுடியும்" அப்படின்னு அரசியல் விமர்சகர்கள் எல்லாரும் சொல்லிக்கினு இருக்காங்க. ஆனா இப்படி அடிக்க முடியுமான்னு கதர்கள் எல்லாம் உள்ள உக்காந்து யோசிச்சுக்குகிட்டு இருக்காங்க.... அதோடு சேர்ந்து கதறிக்கிட்டும் இருக்காங்க. சில பேரு ராகுல்தான் காரணமென்றும், சில பேர் சோனியான்னும், சில பேர் மன்மோகன் என்றும், இன்னும் சிலர் ஊழல் என்றும் மாற்றி மாற்றி குற்றம் சாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் நாம் இந்தப் பத்தாண்டு காலத்தில் ஒரு நல்ல ஆட்சியைத் தரவில்லையே என்று வருத்தம் கூட தெரிவிக்காத நிலையில்தான் இருக்கின்றனர். இதுதான் இன்னும் பத்தாண்டுகளுக்கு இவர்கள் ஆட்சிக்கு வரவே தகுதியில்லாதவர்கள் என்பதை காட்டுகிறது.
...
...
இந்தச் சூழலில்தான், தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய பிரதமர் மோடி அவர்களின் இந்த புர்ஜ் காலீபா வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் காங்கிரஸ் என்று நம்மைப் போன்ற சிலரால் கணிக்க முடிகிறது. யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதைக் காட்டிலும், யார் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதில் எல்லாரும் - மிகச் சரியாகவே இருந்திருக்கிறார்கள். ஆக மூன்று முக்கியக் காரணங்கள் தேடினால் அதில் எல்லாம் காங்கிரஸ்காரர்களே காரணம் என்பது எல்லாரும் அறிந்திருப்பார்கள்.
....
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மகத்தான வெற்றி பெற காரணம் காங்கிரஸ் என்றாலும் அவருக்குண்டான பங்கை அவ்வளவு குறைத்தும் மதிப்பிட முடியாது. இந்தியத் தேர்தல்களின் தேதி முன்னரே என்ன செய்ய வேண்டும் என்பதை அவரும், மீடியாக்களும் முன்னெடுத்து விட்டனர்.குஜராத் முன்னோடி மாநிலம் என்று எல்லாரும் போட்டி போட்டு எழுத ஆரம்பித்த போதே இந்த முடிவுகள் முன்கூட்டியே தெரிந்து விட்டது. ஆனால் குஜராத்தைக் காட்டிலும் மேலோங்கிய மாநிலங்கள் இருந்தன என்றாலும், அவைகளை விட மிகச்சிறந்த மாநிலமாக, ஒரு மாடலாக காண்பிக்கப்பட்டது. உண்மையிலேயே அதுதான் மாடலா என்றால் அதற்கான பதில் எப்படி இருக்கும் என்பது தெரியாது. இந்தத் தருணத்தில் ஜான் ஸ்வின்டன் பத்திரிகை சுதந்திரம் பற்றி 1880 ; ல் சொன்ன சிறு விஷயத்தை பதிவு செய்வது அவசியம். -
"The business of the journalists is to destroy the truth, to lie outright, to pervert, to vilify, to fawn at the feet of mammon, and to sell his country and his race for his daily bread. You know it and I know it, and what folly is this toasting an independent press?
என்னதான் சுற்றுப் பயணம் செய்தாலும், பேசுவதற்கான கருவை வழங்கியது காங்கிரஸ் தானே. டீ விற்பவர் என்கிற வார்த்தை இவ்வளவு பிரபலம் ஆகும் என்று காங்கிரஸ்காரர்கள் எதிர்பார்த்திருக்க வில்லை. ஒரு முறை மோடி சொன்னதைப் போல - ராகுல் காந்தி மிகச் சிறந்த காமெடியன். ஸ்ட்ரெஸ் குறைய ராகுலின் பேச்சைக் கேட்க வேண்டும் என்றார்... இந்தத் தேர்தலில் காமெடியன்கள் தோற்றுப் போயிருக்கிறார்கள். துரைமுருகன் சொன்னார் - முன்பெல்லாம் சிரிப்பதற்கு வடிவேலுவின் ஜோக்கைக் கேட்பேன், இப்போதெல்லாம் விஜயகாந்த் அவர்களின் பிரச்சாரத்தைக் கேட்கிறேன்.
....
மோடி சர்க்கார் எப்படி செயல் படுகிறது என்பதைப் பொருத்துதான் பார்க்க்க வேண்டும். நடக்கிற நிகழ்வுகளை இதுவரை கவனிக்கிற போது முந்தய அரசின் கொள்கைகள் எதையும் இவர்கள் மாற்றுவது போலத் தெரியவில்லை. அதே தாராள மயமாக்கல் கொள்கைகள் - ரயில் துறை உட்பட 49 சதவிகிதம் தனியார்களுக்கு எந்தவித தொல்லைகளும் இல்லாமல் சேர் பெற வசதி (யோசிக்கிறார்கள்) - மதாமாதம் பெட்ரோல் விலை உயர்வு... இலங்கை அரசோடு உள்ள உறவு என்று மிகப் பெரிய வேறுபாடு இல்லை என்றே தோன்றுகிறது.தேர்தல் செலவுகளுக்கு வாரி வழங்கிய வள்ளல்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டும்...
இருந்தாலும் இப்போது பொறுப்பேற்றிருக்கிற அரசு சுற்றியுள்ள அரசுகளோடு நல்ல உறவை மேம்படுத்த செய்த முயற்சி பாராட்டப்பட வேண்டியதுதான். பாகிஸ்தான் கிரிக்கெட் டீம் வந்தால் வெறி கொள்ளும் ஆர். எஸ். எஸ். பாகிஸ்தான் பிரதமர் வந்த போது அமைதி காத்தது ஏனோ? எதுவாக இருந்து விட்டுப் போகட்டும். பொறுப்பேற்றிருக்கும் அரசை விரைவில் குறை கூறுவது சரியல்ல என்றே படுகிறது. வாழ்த்துக்கள்.
தனிப் பெரும்பான்மை - அதிக அதிகாரம் தனியானது அல்ல. அதோடு மிக அதிகமான பொறுப்பும் சேர்ந்தே வரும். தனித்து பார்க்க இயலாது.
ஹானரபில் பிரதம மந்திரி அவர்களே!
--------------------------------------------------------------------------------------------

பணம் வாங்கிக் கொண்டு தேர்தல் கணிப்புகள் வெளியிட்ட அனைத்து பத்திரிகை நண்பர்களும் இதை நோக்குவார்களாக.... அப்படி வெளிவந்த செய்தியை நீர்த்துப் போகச் செய்த நண்பர்களும் கவனிப்பார்களாக.
இந்தச் சூழலில் ஒட்டு மொத்தமாக ஓட்டு வங்கிகள் தங்களது ஓட்டுக்களை விரயம் செய்துவிட விருப்பம் இல்லாமல் வெற்றி பெரும் கூட்டணிக்கே வாக்குகளை வாரி வழங்கியிருக்கிறார்கள். அவர்களது வாக்குகளைப் பெரும் தகுதியும், திறமையும், தனக்கு இருக்கிறது என்று தனது அசராத பிரச்சாரத்தால் மோடி மக்களது நம்பிக்கையைப் பெற்றார். இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, மோடி இந்த வெற்றியை உறுதி செய்து கொண்டார். ஆனால் இந்த அளவுக்கு வெற்றி இருக்கும் என்று பலர் எதிர் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை.
என்னதான் சுற்றுப் பயணம் செய்தாலும், பேசுவதற்கான கருவை வழங்கியது காங்கிரஸ் தானே. டீ விற்பவர் என்கிற வார்த்தை இவ்வளவு பிரபலம் ஆகும் என்று காங்கிரஸ்காரர்கள் எதிர்பார்த்திருக்க வில்லை. ஒரு முறை மோடி சொன்னதைப் போல - ராகுல் காந்தி மிகச் சிறந்த காமெடியன். ஸ்ட்ரெஸ் குறைய ராகுலின் பேச்சைக் கேட்க வேண்டும் என்றார்... இந்தத் தேர்தலில் காமெடியன்கள் தோற்றுப் போயிருக்கிறார்கள். துரைமுருகன் சொன்னார் - முன்பெல்லாம் சிரிப்பதற்கு வடிவேலுவின் ஜோக்கைக் கேட்பேன், இப்போதெல்லாம் விஜயகாந்த் அவர்களின் பிரச்சாரத்தைக் கேட்கிறேன்.
....
மோடி சர்க்கார் எப்படி செயல் படுகிறது என்பதைப் பொருத்துதான் பார்க்க்க வேண்டும். நடக்கிற நிகழ்வுகளை இதுவரை கவனிக்கிற போது முந்தய அரசின் கொள்கைகள் எதையும் இவர்கள் மாற்றுவது போலத் தெரியவில்லை. அதே தாராள மயமாக்கல் கொள்கைகள் - ரயில் துறை உட்பட 49 சதவிகிதம் தனியார்களுக்கு எந்தவித தொல்லைகளும் இல்லாமல் சேர் பெற வசதி (யோசிக்கிறார்கள்) - மதாமாதம் பெட்ரோல் விலை உயர்வு... இலங்கை அரசோடு உள்ள உறவு என்று மிகப் பெரிய வேறுபாடு இல்லை என்றே தோன்றுகிறது.தேர்தல் செலவுகளுக்கு வாரி வழங்கிய வள்ளல்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டும்...
இருந்தாலும் இப்போது பொறுப்பேற்றிருக்கிற அரசு சுற்றியுள்ள அரசுகளோடு நல்ல உறவை மேம்படுத்த செய்த முயற்சி பாராட்டப்பட வேண்டியதுதான். பாகிஸ்தான் கிரிக்கெட் டீம் வந்தால் வெறி கொள்ளும் ஆர். எஸ். எஸ். பாகிஸ்தான் பிரதமர் வந்த போது அமைதி காத்தது ஏனோ? எதுவாக இருந்து விட்டுப் போகட்டும். பொறுப்பேற்றிருக்கும் அரசை விரைவில் குறை கூறுவது சரியல்ல என்றே படுகிறது. வாழ்த்துக்கள்.
தனிப் பெரும்பான்மை - அதிக அதிகாரம் தனியானது அல்ல. அதோடு மிக அதிகமான பொறுப்பும் சேர்ந்தே வரும். தனித்து பார்க்க இயலாது.
ஹானரபில் பிரதம மந்திரி அவர்களே!
--------------------------------------------------------------------------------------------
Labels:
இந்தியா,
சுதந்திரம்,
தேர்தல்
Sunday, 23 March 2014
டோன்ட் வொர்ரி - நிமிர்ந்து நில்
நிமிர்ந்து நில் தேசிய கீதம் டோன்ட் வொர்ரி
எது நடந்தாலும் ....
இந்த திரைப் பட விடியோவைப் பார்க்கிறதுக்கு முன்னாடி எனது பழைய பதிவான கவலைப் படாதே சகோதரா வைப் படித்துவிட்டு வரவும்.
இசை பற்றியெல்லாம் ஒப்புமைப் படுத்துவது என் நோக்கமல்ல.

Friday, 14 March 2014
Monday, 24 February 2014
தமிழர்கள் எமோஷனல் பக்கிகளா ?
குற்றச்சாட்டு
"தமிழர்கள் இமோஷனல் பக்கிகள் என்றும், மரணதண்டனை ரத்து செய்யப் பட்டதற்கு தமிழர்கள் ஆராயாமல் ஆர்ப்பரிக்கிறார்கள் - தீவிரவாதிகளை எல்லாம் விடுவிக்கச் சொல்லுகிறார்கள். இது அடுக்குமா? ரோட்டில் தீவிரவாதிகள் எல்லாம் நடமாட ஆரம்பித்து விட்டால் நாடு நல்ல இருக்குமா? காப்பித்தண்ணி குடிச்சுட்டு, இட்லி சாம்பார் சாப்டுட்டு, கைலியை கட்டிக்கிட்டு, பட்டா பட்டி போட்டுக்குட்டு, எந்த அறிவும் இல்லாமல் முக நூலில் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள்" என்கிற ரீதியில்,

தமிழர்களைப் பற்றிய ஒரு தவறான, பிற்போக்குத்தனமான, இமொஷனல் நண்பர்கள், வலைப்பதிவில், நாளிதழில், ஆங்கில-இந்தி தொலைக் காட்சிகளில் கத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஒத்தூதுவதற்கென சில காங்கிரஸ்காரர்கள், அவர்களுக்கு எதிரானவர்கள் என பல தமிழ் நாட்டில் வாழும் தமிழர்களும் அடக்கம். இதுல மட்டும் இவங்கெல்லாம் ஒன்னு சேர்ந்துவிடுகிறார்கள்.
காரணம் குழப்பம்
எல்லாரும் பல விஷயங்களைப் போட்டு குழப்பிக் கொண்டு இருக்கிறார்கள். இதைப் பற்றி நாம் ஏறக்குறைய மூன்று வருடங்களுக்கு முன்னதாகவே எழுதியிருக்கிறோம். மரண தண்டனைக்கு எதிரான போராட்டம் என்கிற ரீதியில், இந்தத் தீர்ப்பிற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் உண்டு. அவர்கள் இமொஷனல் பக்கிகள் அல்ல. அதற்குப் பெயர் மனித உரிமைகளை வலியுறுத்துவது. ஒரு மனித உயிரைப் பறிக்கிற உரிமை அரசிற்கோ சட்டத்திற்கோ கிடையாது என்பதுதான். சரி ஒருவன் பலரைக் கொன்றிருந்தால், அவனை அரசு கொல்லக்கூடாதா என்கிற கேள்விக்கு அப்போது அரசும் பயங்கரவாதியாகி விடுகிறது என்று நினைப்பவர்கள் அவர்கள். எனவே தண்டனையே வேண்டாம் என்று சொல்லுபவர்கள் அல்ல அவர்கள்.

இன்னும் சிலர் இந்த மூவர் அல்லது அதில் ஒருவர் மரண தண்டனை கொடுக்கப் படும் அளவிற்கு குற்றம் செய்யவில்லை / அல்லது குற்றமே செய்யவில்லை என்கிற ரீதியில் - நிரபராதிகளுக்கு தண்டனை கொடுப்பதே தவறு - அதிலும் பொய் சாட்சியங்களை வைத்து தண்டனை தருவது தவறு / அந்த விதத்தில் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று சொல்லுபவர்களும் உண்டு. இந்த இரண்டு வகைக் காரர்களும் மரண தண்டனை நிறுத்தி வைக்கப் பட்டது சரி என்று சொல்லும் போது இரண்டையும் ஒன்றாக நினைப்பது, அவர்களின் குற்றமே தவிர நமதல்ல.
ஜெயின் கமிஷன் அறிக்கையும், அதைத்தொடர்ந்து அமைக்கப் பட்ட கமிஷங்களும் இன்னும் முடிவே தெரிவிக்காத நிலையில், ராஜீவ் காந்தியின் கொலையில் பலருக்குத் தொடர்பு உண்டு என்று சொல்லப்பட்டதை சீரியசாக எடுத்துக் கொள்ளாமல் இருக்கும் போது - இது ஒரு சோடிக்கப்பட்ட வழக்கு என்று இத்தனை ஆண்டுகளாகக் கத்திக் கொண்டிருந்தவர்கள் - தாமதமானதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி அளித்த தீர்ப்பை வரவேற்கிறார்கள்.
இதில் இமொஷனால் பக்கிகள் என்று ஒட்டு மொத்தமாக தமிழர்களைக் குற்றம் சாட்டும், இந்திக்காரர்களையும் அவர்களுக்கு வக்காளத்து வாங்கும், தமிழ் நாட்டுக்காரர்களையும் என்னவென்று சொல்லுவது. ஆனால், தொலைக் காட்சி அவர்கள் கையில் இருக்கிறது. அதற்கு ஒத்தூதுவதற்கென்று எல்லாரும் சேர்ந்து கொள்கிறார்கள்.
கண்டிக்கப் படவேண்டியது
மீடியாக்கள் எல்லாம் சேர்ந்து சில தவறான கருத்துக்களை முன்னெடுப்பதிலேயே குறியாக இருக்கின்றன. இது மிகத்தவறான அவதூறுகளை தென்னக மக்களை நோக்கி வீசுகிற அவர்களின் அநாகரிக போக்கு கண்டிக்கப்பட வேண்டியது. தினம் தினம் தமிழர்கள் கடலில் செத்துக் கொண்டிருக்கும் போது, அதைக் கண்டுகொள்ளாத மீடியா, ஒரு மோசடி தேவயானிக்காக வரிந்து கட்டிய மீடியா, அணுஉலைகளின் ஆபத்திற்கெதிராக வருடக் கணக்கில் போராடுபவர்களை கண்டு கொள்ளாத மீடியா - இப்போது விவாதங்களையும், நேர்காணல்களையும் சர்வேக்களையும் எடுத்து கொண்டிருக்கிறது. இது வெறும் தி.ஆர்.பி ரேட்டிங்கோடு முடிந்து போகிற ஒரு விஷயமல்ல. அதைத்தாண்டி, தமிழர்களை, தீவிரவாதிகளாக, ஒழுக்கமற்றவர்களாக, சித்தரிக்கும் போக்கு.
யார் பண்பாட்டோடு உடையவர்கள், யார், கலாச்சாரமற்றவர்கள் என்பதை அறிந்து கொள்ள, ஒரு முறை சென்னையிலிருந்து டில்லிக்கு ரயிலில் சென்று வந்தால் புரியும். ரயில்வேத்துறை லாபம் ஈட்டுவது தென்னகத்தில், ஆனால், விரிவாக்கப் பணிகள், எல்லாம் வடக்கே.
அதேபோல ஆபத்து தரும் அணு உலைகள் தென் தமிழகத்தில் - தினம் செத்து செத்து பிழைக்கும் மீனவர்கள் தமிழகத்தில் - இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல், இந்தியாவைத் தூக்கி நிறுத்துவது வடவர்கள் போலவும், அவர்கள் தான் சாத்வீக வாதிகள் போலவும் சித்தரிப்பதும், தென்னகத்து மக்களை எமோஷனல் பாக்கிகள் என்பதும் வேதனை தரும் நிகழ்வு.

அடுத்த குழப்பம்
இது மரணதண்டனை ரத்து என்கிற விதத்தோடு முடிந்திருந்தால் கூட ஒன்றும் இல்லாமல் இருந்திருக்கும். ஆனால், விடுதலை என்பதுதான் பிரச்சனை என்று சொல்லலாம்.
2008 - டில் கருணாநிதி அவர்களை விடுவிக்க இருக்கிறார் இது பயங்கரவாதம் என்று கடும் கண்டனம் தெரிவித்த அம்மையார் மூன்று நாட்களுக்குள், பதில் வராவிட்டால் விடுதலை செய்வோம் என்று சொல்லியது கேலிக் கூறியதுதான். அவருக்கு இந்த விளைவுகள் எல்லாம் தெரியாமல் இல்லை. சட்ட நுணுக்கங்கள் அறிந்திராமல் இருப்பதற்கும் வாய்ப்புகள் இல்லை.

முன்னாள் முதல்வர் கருணாநிதி இவருக்குப் பயந்துதான் கருணை மனுக்களில் கூட இந்த மூவர் பெயரையும் சேர்க்காமல் இருந்தார். இன்று இதுவே கருணாநிதிக்கு எமனாக வந்து நிற்கிறது. மிகச் சிறப்பாக தீர்மானம் நிறைவேற்றும் நமது சட்டசபை இந்தத் தீர்மானத்தின் வழியாக இந்த விவாதங்கள் முன்னெடுக்கப் பட்டிருக்கிறது.
விஷயம் என்னவெனில், இந்த மூன்று விஷயங்களையும் போட்டு குழப்புவதுதான். இதில் மறந்து போனதெல்லாம் - ஏன் இத்தனை வருடங்களாக என் ராஜீவ் கொலை வழக்கை முடிக்காமல் இருந்தார்கள், ஜெயின் கமிசன் அதைத்தொடர்ந்த கமிஷன்கள் எவற்றையும் ஏன் சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை.
இன்னும் ஒன்றையும் புரிந்து கொள்ள வேண்டும் - நீதி மன்றங்களில் சாட்சியங்கள், வாதம் இவைகள் இரண்டும்தான் முக்கியம். உண்மையைப் பற்றியெல்லாம் யார் கவலைப் பட்டார்கள். நீதி மன்றங்களில் மட்டுமல்ல மீடியாக்களும்தான்...
நீதிமன்ற அவமதிப்பு அமைச்சர் செய்யலாமா?
நம் புதுச்சேரி ? அமைச்சர் வழக்கம் போல இந்தத் தீர்ப்பை நிதி மன்றம் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும், ஆதாரங்களின் அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறார். யாராவது அவர் மீது வழக்கு தொடுத்தால் நலமாயிருக்கும்.
அமேரிக்கா செய்யுமா?
ஆங்கில சானல்களில் ஆ ஊன்னா அமேரிக்கா -- ஆப்ரிக்கா ன்னு பேசுறாங்க... ஜான் எப் கென்னெடியைக் கொன்றவருக்கு நாப்பது ஆண்டுகளுக்குப் பின்பும் பரோல் கிடையாது... இது தெரியுமா - ன்னு கேக்குறாங்க ---
எல்லாத்துக்கும் அமெரிக்காவைப் பாத்தா நல்ல இருக்கும். அங்கேயும் இதே பிரச்சனைதான். இது யார் பிளான் பண்ணினான்னு தெரியாம இருக்கவே பல கொலைகள் நடந்ததுங்கிறது வேற விஷயம். அங்கே ஊழல் அரசியல்வாதிகள் இங்க உள்ளது போல ஊர்க்கனக்குல இல்லையே.. அதைப் பத்தி பேசுவோமா? அங்க நீதித்துறை செயல்படும் விதம் சரின்னா -- தேவயாணி கேசுல என்னத்துக்கு பதறியடிச்சு இது தப்புன்னு கொட்டு போட்டுகிட்டு பேசுனீங்க.... ஒரு கேசுல அவங்க நல்லவங்க இன்னொரு கேசுல கேட்டவுங்களா...
அமெரிக்காவையும் ஆப்ப்ரிக்காவையும் விட்டுட்டு டெல்லிக்கு வாங்க. பாலியல் வழக்கில் தீர்ப்பு வந்த பிறகுதான் வரிசையா பாலியல் வன்முறைகள் --- தண்டனை மட்டுமே குடுக்குறதை விட்டுட்டு, என்ன செய்தால் குற்றங்கள் குறையும்னு மைக் தூக்கிப் பேசுங்க...
உண்மைக்குப் புறம்பாய் பேசலாமா?
காங்கிரசின் முக்கியத் தலைவரும், ராஜீவ் காந்தியின் மகனுமாகிய ராகுல் காந்தி, நாட்டின் பிரதம மந்திரியைக் கொன்றவர்களுக்கே --- என்ற கேள்வியின் மூலம், மக்களை எமோஷனல் வழியில் தன்னைக் நோக்கித் திருப்பப் பார்க்கிறார். அப்போது ஆட்சியில் இல்லாத அவர் தேர்தலை முன்னிறுத்தியே பிரச்சாரம் செய்ய வந்தார் என்றும், உண்மையைச் சொல்லப் போனால், அவரது கொலைக்குப் பிறகே காங்கிரஸ் நிறைய இடங்களைப் பிடித்தது என்பதும் வரலாறு. தந்தையை இழந்த ஒருவருக்கு அந்த இழப்பு ஈடு செய்ய முடியாதுதான். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ஒரு கட்சியின் அடுத்த பிரதமர் என்று பேசப் படுகிறவர், கொஞ்சம் உண்மையாகவும் இருப்பது நல்லது. ஒருவர் பிரதமராக இருக்கும் போது கொள்ளப் பட்டால், அவர் சொன்னது உண்மையாக இருக்கும். இல்லையெனில், 'எமோஷனல்' என்று தான் சொல்லவேண்டும்.
அவர்கள் எமொஷனலாக இருக்கலாம் அவர்கள் அரசியல்வாதிகள்.
அவர்கள் எமோஷனலாக இறக்கலாம், ஏனெனில் அவர்கள் இந்தி மீடியா...
அவர்கள் இருக்கலாம், ஏனெனில் ...
ஆனால் தமிழர்கள் இருக்காதீர்கள்!
Wednesday, 19 February 2014
எல்லாம் சிவமயம் - குடியரசு - 2
இது இந்தியக் குடியரசும் அரசியல் அமைப்பும் - 1 என்ற முந்தைய தொடர்ச்சியாக படிக்க விரும்புவோர் இந்தச் சுட்டியை அழுத்தவும்.
உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி சதாசிவம் கடந்த ஏழு மாதங்களுள் மிக உன்னதமான தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார். ஏற்கனவே ஜனவரியில் அவர் வழங்கிய தீர்ப்பு நேற்று வழங்கிய தீர்ப்பை முன்னறிவித்ததாகவே கொள்ளலாம். ஒரு குடியரசின் மிக முக்கியமான அம்சம் என்பது நீதித் துறை. அது மிகவும் உண்மையாகவும், நேர்மையாகவும் நடக்கும் போதுதான் மக்களுக்கு குடியரசின் மீதும், அரசியல் அமைப்பின் மீதும் நம்பிக்கை ஏற்படும்.
ஏற்கனவே பேரறிவாளனை பொறுத்த வரை, அவரது சாட்சியம் மாற்றி எழுதப்பட்டு அவரையும் குற்றவாளியாக்கிய உண்மை, சாட்சியம் வாங்கிய அதிகாரியால் ஒப்புக்கொள்ளப் பட்டபோதே, நீதி மன்றமே தானாக அந்த வழக்கை எடுத்துக் கொண்டு, குறைந்த பட்சம் பேரறிவாளனையாவது விடுதலை செய்திருக்க வேண்டும். ஆனால் இன்று வரை அது நடக்க வில்லை என்றாலும், இத்தனை ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்ட கருணை மனு காரணமாக மரண தண்டனை ரத்து செய்யப் பட்டிருக்கிறது என்கிற போது - அது கொஞ்சம் நீதி மன்றங்களின் மீதான நம்பிக்கையை அதிகப் படுத்தியிருக்கிறது.
தலைமை நீதிபதி சதாசிவம் அவர்களைப் போல நீதிபதிகள் அனைவரும் நேர்மையோடும், துணிச்சலோடும் இருப்பது அவசியமாகிறது. நிரபராதிகள் ஒரு போதும் தண்டிக்கப்பட்டு விடக் கூடாது என்பதுதான் நீதி தேவதையின் அறைகூவலாக இருந்தாலும், நிரபராதிகள் தண்டிக்கப்படுவதும், குற்றவாளிகள் நிரபராதிகள் போல வெளிவிடப் படுவதும் தான் குடியரசின் மீதான நம்பிக்கையை நீர்த்துப் போகச் செய்து விடுகிறது.
எப்போது ஒரு நாட்டின் அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து விசா மோசடி செய்த ஒரு தேவயானிக்காக தவம் இருந்து அவரை வரவழைத்து அதைக் கொண்டாடியதோ, அவருக்கு பதவி உயர்வு கொடுத்ததோ அப்போதே நாம் உண்மையையும் நீதியையும் தூக்கிப் பிடிக்கிறோமா இல்லையா என்பது உலகுக்கு தெரிந்து விட்டது. எப்போதும் பணம் படைத்தவர்களுக்கு சாதகமாகவே வழங்கப்பட்டு வருகிறதோ என்கிற சந்தேகத்தை இந்தத் தீர்ப்பு உடைத்தெறிந்திருக்கிறது. இது போல தொடர்ந்து நீதி பட்சத்தில் உண்மையான குடியரசாக இந்தியா மலர வாய்ப்புள்ளது.
இந்த மரண தண்டனை ரத்து ஒரு சிலரால் கேலி செய்யப் படலாம். திரு ராகுல் காந்தி போல - "ஒரு பிரதமரைக் கொன்றவர்களுக்கே மரண தண்டனை ரத்து, விடுதலை என்றால் சாதாரண மக்களைக் கொன்றவர்களுக்கு என்ன நடக்கும் என்று பயந்து போயிருக்கிறார். அதிகாரம் தனது கையில் இருந்து, சாட்சியங்களை மாற்றிய அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக்கொண்டு நிரபராதியை 23 ஆண்டுகளாக சிறையில் வைத்திருந்த இவர்களை - என்னவென்று கேள்வி கேட்பது? இவ்வளவு பேசப்பட்ட வழக்கிலேயே நீங்கள் சாட்சியங்களை மாற்றியிருக்கிறீர்களே - யாருக்கும் தெரியாத வழக்குகளில் உங்களின் கை வரிசை எப்படி இருந்திருக்கும் என்று கேட்கலாம் அல்லவா?
எது எப்படியெனினும், இப்போது இவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் அம்மாவுக்கு இருப்பதால், எல்லாம் சிவமயத்திலிருந்து, அம்மாமயத்திற்கு மாறியிருக்கிறது. ஒரு சிலரை விடுவிப்பதாலேயே, குடியரசின் மீதும் அரசியல் அமைப்பின் மீதும், சட்டத்தின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை வந்துவிடாது.
முன்னால் நீதிபதி சுரேஷ் குஜராத் கலவரத்தில், தங்கள் வஞ்சம் தீர்க்க வருபவர்களை அனுமதியுங்கள் என்று சொன்னதற்கான 'ஒலிப்பதிவு' இருப்பதாக சொல்லியிருக்கிறார். இதைத் தெரிவித்த திரு பாண்ட்யா சுட்டுக் கொள்ளப் பட்டதும் அனைவருக்கும் தெரியும். சஞ்சீவ்பட் என்கிற போலிஸ் அதிகாரி திரு மோடி இவ்வாறு சொன்னார் என்று சொன்னதும், அவரை வேறு சில காரணங்களுக்காக சஸ்பெண்ட் செய்ததும் அனைவரும் அறிந்ததே. இது போல எத்தனை வந்தாலும், அரசியல் வாதிகள் விடுவிக்கப் படலாம்... ஆனால் சதாசிவம் போல சில உண்மையான நீதிபதிகள் நேர்மையோடு செயலாற்றும் வரை நீதி தாமதமானாலும், காப்பாற்றப் படலாம் என்கிற நம்பிக்கையையும் தான் குடியரசின் மீதும் வைக்க வேண்டியிருக்கிறது.

Election 2014,
அரசியல்,
இந்தியா,
குடியரசு,
தமிழகம்,
மரண தண்டனை,
மோடி
Subscribe to:
Posts (Atom)