தொடர்ந்து பெய்து வரும் மழையினால் மக்கள் அதிகம் பாதிக்கப் பட்டிருக்கின்றனர். சென்னை ஏரிகளுக்கு நடுவில் இருப்பது மீண்டும் நிரூபணம் ஆகி இருக்கிறது. வானம் பார்த்த பூமிகளிலயும் நல்ல மழை.
பள்ளிகளுக்கு விடுமுறை - பல பாலங்கள் உடைந்து தண்ணீர் சாலையில் பெருக்கெடுக்கிறது.
மழை - இயற்கையின் கொடை - வரும் போது மழையைச் சேமித்து வைக்கும் பழக்கம் நமக்கு முற்றிலும் இல்லாமல் போய்விட்டது.
இருந்த குளங்கள், கண்மாய்கள், ஏரிகள் என அனைத்தும் நாம் வாசம் செய்யும் வீடுகளாகி விட்டன...
காடுகளை அழித்து அங்கே விலங்குகள் வாழ விடாமல் செய்தோம். பிறகு - விலங்குகள் ஊருக்குள் நுழைகின்றன என்று கூப்பாடு போடுகிறோம்...
தண்ணீர் இருக்கும் தாழ்வான பகுதிகளில், குளங்கள், ஏரிகளில் வீடுகள் கட்டிக் கொண்டு இப்போது வீடுகளுக்குள் தண்ணீர் - வெள்ளம் என்று வேதனைப் படுகிறோம்.
ஒன்று மட்டும் நிச்சயம் - இன்னும் சில மாதங்களில் நாம் தண்ணீர் பஞ்சம் - தண்ணீர் பற்றாக் குறை என்று நாம் அலைவோம் -
அதையும் இதே நாளிதழ்கள் வெளியிடும் -
அப்போது மழை பகவானே எங்களுக்கு மழையைக் கொடு என்று சாமியை முற்றுகை இடுவோம்...
Tuesday, 7 December 2010
Sunday, 28 November 2010
நவம்பர் இருபத்தி ஏழு
தமிழர்களை தலை நிமிர்த்தும் முயற்சியில் தனது இன்னுயிரை ஈந்த அந்த போராளிகளை நினைவு கூறும் போது, இருக்கும் தமிழர்கள் இன்னும் இன உணர்வோடு எழுந்து நிற்க இந்த நாள் துணை நிற்கும் என்பது மட்டுமல்ல, தியாகிகள் எப்போதும் வரலாற்றும் பக்கங்களிலும், நமது நினைவுகளிலும் நீங்காமல் இருப்பார்கள்.
Labels:
தியாகிகள்
Monday, 1 November 2010
மனத்திடம் வேண்டும்
டாவின்சி கோட் புத்தகம் வெளி வந்த போது, திருச்சபைக்கு பெரும் அவதூறு வந்து விட்டது என்று தங்களின் கத்தோலிக்க விசுவாசத்தை பறை சாற்ற அந்தப் புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என்றும், அந்தத் திரைப் படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் கூக் குரலிட்டார்கள். என்ன ஆயிற்று? புத்தகமும் விற்றுத் தீர்ந்தது, படமும் வசூலை அள்ளியது.
சொல்லப்படும் செய்தி உண்மையானால், அதை ஏற்றுக் கொள்கிற பக்குவம் வேண்டும், இல்லையென்றால் மறுத்துச் சொல்கின்ற மனத்திடமும், உண்மைக் கருத்தை வெளியிடும் நுண்ணறிவும் வேண்டும்.
Angels and Demons - இருந்த இடம் தெரியாமல் இருந்த புத்தகம்- மீண்டும் பதிப்பிக்கப் பட்டு, திரையிலும் வந்து திருச்சபைக்குள் இருக்கிற பழமை வாதத்தை எடுத்துச் சொன்னது.
இந்த நாவல்களை எல்லாம் தாண்டி, - பத்திரிகைகள் வத்திக்கான் மீது மிகுந்த பாசத்தோடு, என்ன நடக்கிறது என்பதை உன்னிப் பாய் கவனித்து வருகிறது. அமெரிக்காவில், குருக்களின் பாலியல் தொடர்பான சர்ச்சைகள், சிறுவர்களின் மீது குருக்களின் பாலியல் கொடுமைகள் - பல மறைமாவட்டங்களை ஒட்டு மொத்தமாக ஒன்றுமில்லாத நிலைக்கு மாற்றியது. சொத்துக்களை எல்லாம் விற்று பணம் கொடுக்க வேண்டியதாயிற்று.

அயர்லாந்து இப்போது விழி பிதுங்கி நிற்கிறது. அதைத் தொடர்ந்து வத்திக்கானுக்கு பல நெருக்கடிகள்.
மணத்துறவை மீண்டும் திருச்சபை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. மணத் துறவை இயேசு கட்டாயம் அனைவரும்மேற்கொள்ள வேண்டும் என்று சொன்னதாகவோ அல்லது அது குருக்களுக்கு அவசியம் என்று விவிலியம் சொல்வதாக நமக்குத் தெரியவில்லை.
தொடக்க காலத்து திருச்சபையும் இதற்கு முற்றிலுமாக உடன்பட்டதாகவும் சொல்வதற்கு இல்லை. அதற்கு நாம் இவ்வளவு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமா? -
Tradition . பாரம்பரியம் மிக அவசியம் ? ! ?
நன்றாக யோசித்துப் பாருங்கள்.
இன்றைக்கு மீடியாவின் அபரிமிதமான வளர்ச்சியும் அதன் கழுகுக் கண்ணும்தான்
திருச்சபையை தெருவுக்குஇழுத்து வருகிறது என்று சொல்வோமானால் நம்மைப் போல உலகம் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இதற்கு முன்பு செய்திகள் வெளியே வரவில்லை - இப்போது வருகின்றன.
எத்தனை துறவிகள் வசித்த கோட்டைகளுக்குள் நடந்தது என்ன என்பது நமக்குத் தெரியுமா? மணத் துறவை கடைபிடித்து திருமணம் செய்யாதவர் கூட செய்ய யோசிக்கும் தவறுகள், குற்றங்கள் எவ்வளவு நடந்தன.
மீண்டும் பழையதைக் கிளறுவதால் ஒரு புண்ணியமும் இல்லை. இனிமேல் இருக்கும் திருச்சபையாவது ஒழுங்காக இருக்குமா?
இத்தனைக்குப் பிறகும் நான் ஏன் ஒரு கிறித்துவனாக இருக்கிறேன்?
மனிதர்கள் செய்கிற தவறுக்கு கடவுளை குறை சொல்ல முடியுமா? இவர்கள்தான் எனக்கு விசுவாசத்தைக் கொடுக்கிறார்களா என்ன?
பலர் செய்கிற தவறுகளுக்காக ஒட்டு மொத்தமாக எல்லாரையும் குறை சொல்ல முடியுமா ?
கடவுள் அவர்களைப் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கைதான். இந்த நம்பிக்கை மக்கள் மத்தியில் நிறைய இருப்பதால்தான் இவர்கள் தங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்ள மாட்டேன் என்கிறார்களோ?
சரி எல்லாரும் மதம் மாறிக் கொள்ளலாமா? எந்த மதம்?
எந்த மதத்தில் தவறுகள் இல்லை. பயத்தினால் ஒருவனை தவறு செய்ய விடாமல், தவறாமல் இருக்கிற மதங்கள் -
தனி மனிதர்கள் தங்களை கடவுள் என்று அறிவிக்கிற மதங்கள் -
"கடவுள் இல்லை என்பவனை நம்பலாம்: இருக்குன்னு சொல்றவனையும் நம்பலாம்.
நான்தான் கடவுள்-ன்னு சொல்றான் பாரு அவனை மட்டும் நம்பவே கூடாது"
- தமிழ் திரைப் படங்கள் கூட இது போல மேற்கோள் காட்டக்கூடிய வசனங்களை கொண்டுள்ளது ஆச்சரியம்தான்.
Sunday, 31 October 2010
தமிழ் வாழ்க - Airtel சூப்பர் சிங்கர்
எப்போதாவது தொலைக் காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க வாய்ப்பு கிடைக்கும் போது
சூப்பர் சிங்கர் பார்ப்பது வழக்கம் - பார்த்தேன். இதற்கு முன்பு சிறுவர்களின் குரல்களும் பாடல்களும் அவ்வளவு அருமையாக இருந்தன - சிறுவர்களின் போட்டிகள் பற்றிய கருத்தை தெரிவிக்க இது தருணம் இல்லை.
இப்போது நடக்கும் போட்டியில் நடுவர்களின் மற்றும் வர்ணனையாளரின் தமிழ் பேச்சுதான் நமக்கு சிரிப்பை வரவழைக்கின்றன.
செம்மொழி நடத்தி முடிந்து விட்டது. இம்மொழியை மட்டும் இன்னும் மாற்ற முடியவில்லையே சாமி. இதில் நித்ய ஸ்ரீயின் தமிழ் நன்றாக இருந்தது என்பதையும் பதிவு செய்ய வேண்டும்.
[சவும்யா, ஷைலஜா மற்றும் மால்குடி சுபா] நீங்க நன்னாப் பாடிநேள் - ஷேந்து வரும் - தெரியிறதா உங்களுக்கு - மேல போறச்சே - இவாளோட பாட்டைக் கேட்டுட்டு - ஷுபமாக இருக்கட்டும் - நல்லா முன்னுக்கு வந்திருக்கேள் - நன்னா இருக்கு உங்க வாய்ஸ் - பாடுறச்சே - கவுந்து விழுந்துர்க்கேள் -
பாட வருபவர்கள் பலரும் தன் அடையாளத்தை வெளிப்படுத்த இப்படி அப்படியும் பேசுவதும் பேஷா இருந்தது. - நான் பாத்துண்டே இருப்பேன் -
எனக்குப் பிடித்தது கவ்ஷிக் என்பவரிடம் திவ்யாவின் கமெண்ட்... [இரு வாரங்களுக்கு முன்பு] - "அய்யரா இருந்துகிட்டு அய்யங்கார் பாட்டு பாடி கலக்கீட்டீங்க." நடுவர்களுக்கு எந்த அளவுக்கு ஒருவனின் சாதீயை வெளிப்படுத்துகிறார்கள் பாருங்கள் -
- நல்லாக் குடுக்குறாங்கயா details ?

Saturday, 25 September 2010
டெர்ரி ஜோன்ஸ் - நவீன யூதாஸ் [கிறித்தவத் தீவிரவாதம்]
கிறித்தவர்களின் புனித நூலான புதிய ஏற்பாட்டில் இயேசுவின் வாழ்க்கை வரலாறும் அதில் இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸ் பற்றியும் குறிப்புகள் உள்ளன.
யூதாஸ் இயேசுவை சரியாகப் புரிந்து கொள்ளாமல் காட்டிக் கொடுத்தவன். கிறித்துவைப் பின்பற்றுகிற பலர் இன்றும் வெறும் யூதாசாகவே இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒருவர் - டெர்ரி ஜோன்ஸ்.
உலக குர்ரான் எரிப்புத் திட்டம் - 9 / 11 என்கிற ஒரு தீவிரவாதத் திட்டத்தை டெர்ரி ஜோன்ஸ் முன்மொழிய உலகத்தின் பல மூலைகளிலும் இதற்கு எதிர்ப்பு வலுத்தது.
கிறித்துவ அடிப்படை வாதத்தின் முகம் பலருக்கு வெளியில் தெரியாமல் இருந்தது. இப்போது அது மிக நன்றாய் வெளியே தெரிய ஆரம்பித்து இருக்கிறது. அதற்குப் பிறகு அத்திட்டம் கைவிடப் பட்டதைச் சொன்னாலும் யாரோ ஒருவர் குரானை எரித்து விட பிடித்தது சூடு.

- இது தீவிரவாதத்திற்கு எதிரானனது என்ற கதையை டெர்ரி ஜோன்ஸ் கட்டினாலும் இது இஸ்லாமியத்திற்கு எதிரான நவீன சிலுவைப் போர் என்பதையே இது காட்டுகிறது.
- இத்தகையே செயலே தீவிரவாதத்தின் அடித்தளம் தானே தவிர வேறொன்றுமில்லை. இதுமட்டுமில்லாமல் இததான் அடிப்படை வாதத்தின் ஆணி வேர்.
- கிருத்துவத்தின் அடிப்படை நற்செய்தியைக் கூட புரிந்து கொள்ளாதவர் பாஸ்டர் என்றால் அவரை யூதாஸ் என்று சொல்லாமல் வேறென்ன வென்று சொல்வது.
- இஸ்லாமியத் தீவிரவாதிகள்தான் "இரட்டைக் கோபுரங்களின்" தகர்ப்பிற்குகாரணம் என்று வைத்துக் கொண்டாலும் கூட - அதற்காக ஒரு மதத்தைத் தாக்குவது எந்த விதத்தில் நியாயம். ஒரு கிறித்தவன் தீவிர வாதச் செயலில் ஈடுபட்டால் ... பைபிளை எரித்தால் சரியாகிவிடுமா?
- ஒருவன் புகழ் பெற பல வழிகளைக் கடைப் பிடிக்கின்றனர் - சிலர் இதுபோல... ஆனால் எல்லாவற்றையும் பூதாகாரப் படுத்தி - காலை முதல் இரவு வரை காமெராவைத் தூக்கிச் சென்று அவனைப் பிரபலப் படுத்தும் அமெரிக்க ஊடகங்களும் இதற்குக் காரணம் - அவைகளுக்குத் தொழில் முக்கியம்.
- இதனால் அறிவது என்னவென்றால்... மதம் எல்லாரையும் மதம் பிடிக்க வைக்கும் ஆற்றல் கொண்டது. அதை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பயன் படுத்தலாம்.
Labels:
அமெரிக்கா,
அன்பு,
தீவிரவாதம்,
மதம்,
மூட நம்பிக்கை
Sunday, 5 September 2010
உலகத்தின் நோக்கம் 7
நான் ஏதோ எழுத நினைத்து எங்கெங்கேயோ சுற்றித் திரிந்து விட்டேன்.
அது என் தவறே!
உலகத்திற்கு நோக்கம் இருக்கிறதா இல்லையா என்பது பெரிய விவாதங்களை உள்ளடக்கியது.
இக்கட்டுரையின் மூலம் ஏதாவது ஒன்றை நாம் நிருபித்துவிட முடியும் என்ற எண்ணம் எனக்கு இல்லை – அதில் ஒரு முடிவுக்கும் வர இயலாது.
எந்த ஒரு நிலைப்பாடும் ஏதாவது ஒரு பார்வையிலிருந்து பல்வேறு சிக்கல்களையும், பல கேள்விகளையும் சந்திக்க நேரிடும்.
ஆனால் ஒன்றை மட்டும் நாம் சொல்ல முயற்சிக்கலாம்.

எல்லாமே interpretations என்கிற விதத்தில்
பல்வேறு சிக்கல்களையும் சந்திக்க நேரும்.
தங்களின் interpretations – படி அவரவர்கள் தங்கள் நிலைப்பாட்டில் ஊன்றியிருக்கிரார்கள்.
அதை சரி என்றோ தவறு என்றோ
திட்டவட்டமாக சொல்வதற்கு நமக்கு முடியாது.
ஆனால் ஒன்றை மட்டும் நாம் சொல்ல முயற்சிக்கலாம்.
நாமாக நோக்கத்தை கண்டுபிடிக்கிறோமோ
அல்லது உண்மைலே இருக்கிறதா என்கிற விவாதம் தேவையற்றது.
நாம் இருக்கிற இந்த இயந்திரத்தனமான உலகத்தில் –
நாமும் வேதிப் பொருள்களையும்,
மற்ற உயிரினங்கள் கொண்டிருக்கிற materials – ஐயும் கொண்டிருந்தாலும் –
ஏதோ ஒருவிதத்தில்
நாம் மேம்பட்டவர்களாகவே இருக்கிறோம்.
இதில் யாரும் மறுப்பதற்கு எதுவும் இருக்காது என்றே நம்புகிறோம் –
அவர்கள் materialists – ஆக இருந்தாலும் சரி அல்லது Idealists ஆக இருந்தாலும் சரி – utilitarianism பேசுகிறவர்களாக இருக்கட்டும் அல்லது, பயன்பாடு நிலையைக் கடந்தவர்களாக இருக்கட்டும், கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், மனித நம்பிக்கையுள்ளவர்கள் – யாராக இருந்தாலும் சரி –
மனிதர்கள் மற்ற விலங்குகளைக் காட்டிலும் சற்றே மேலானவர்கள் என்பதை மறுக்க மாட்டார்கள்.
அந்த மேலான குணம் எது என்பதைப் பற்றிய விவாதம் மேலும் பிரிவினையைத்தான் உண்டாக்கும்.
எனவே அந்த விவாதத்தையும் தவிர்த்து விடலாம்.
ஆனால் அந்த மேலான குணம் என்பது – தாவரங்களைக் காட்டிலும், ஆடு மாடுகளைக் காட்டிலும் மேலானது என்றால் – ஏதாவது ஒரு விதத்தில் நாம் பயனுள்ளவர்களாக இருப்பதே சரி என்று படுகிறது.
அதில் முதன்மையானது – மரம் பயனுள்ளதைப் போல (அதற்கு நோக்கம் என்று ஒன்று இல்லாவிட்டால் கூட), விலங்குகள், பயனுள்ளதைப் போல – நாம் பயனுள்ளவர்களாக இருப்பதுதான்.
இயற்கை விதிகளின் படி நமது கண்டுபிடிப்புகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறோம்.
இயற்கையிடமிருந்து கற்றுக் கொள்ளாத விதிகள் அல்லது
அதற்கு அப்பாற்பட்ட புதிய டெக்னாலஜி என்றெல்லாம் ஒன்றும் இல்லை என்றே நினைக்கிறேன்.
அப்படிப்பட்ட இவ்வுலகத்தை நாம் அதன் போக்கிலேயே அழிய விடுவோம்.
அதற்கு நாம் உதவி செய்ய வேண்டியதில்லை. அதுவாய் அழிந்து போகட்டும்.
நாம் வாழ்வதற்கு உகந்ததாய் இருந்த இவ்வுலகம் இன்னும் பல தலைமுறைகளைக் காணட்டும். அதற்கு நாம் பெரிதாய் ஒன்றும் செய்யாவிட்டாலும் – அதை அழிவுக்கு உட்படுத்தும் செயல்களைச் செய்யாமலே இருக்கலாம் என்பதுதான்.
பல கோடிக் கணக்கான ஆண்டுகளாய் ஏறக்குறைய சரியாய் இருந்த இந்த உலகத்தை மிக விரைவாய் அழித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிவியலாளர்களும் நமக்குச் சொல்கிறார்கள்.
Global Warming - ஐ நாம் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
கடந்த சில ஆண்டுகளில் மட்டும் மிக வேகமாய் பூமி சூடாகி வருகிறது –
அதற்கு modern (நவீன )மனிதர்களாகிய நாம்தான் காரணம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
நம் தந்தை கடன் வாங்கினால் அதை நாம் அடைப்பது போல, பிறர் செய்த தவறுகளுக்கும் நாமே பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.
ஊரை எல்லாம் பயன்படுத்திய ஐரோப்பிய நாடுகள் செய்த தவறுகளின் விளைவை நாமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். என்ன செய்வது? – பாதிப்பு என்பது அனைவருக்கும்தான்.
மரங்கள் இருப்பது நல்லது. இயற்கை சக்தியை விரயமாக்காமல் பயன்படுத்துவது – மக்கள் பரந்து விரிந்து வாழ்வது –
விளை நிலங்கள் விளைநிலங்களாகவே இருக்க விடுவது –
ஒவ்வொரு கிராமத்தையும் நகரத்தையும் முன்பு இருந்தது போல self-sufficient ஆக இருக்க வைப்பது –
இன்னும் இவைகளைப் போல என்ன செய்யலாம் என்பதை
அரசுகளும் நாமும் தான் தொடர்ந்து யோசிக்க வேண்டும்.
நமது சிறு செயல்களால், இன்னும் ஒரு ஆண்டாவது இந்த பூமி கூட வாழும் என்றால் அதுவே நாம் நமக்கு முன்பு மாசு படாமல் இந்த உலகை நமக்கு விட்டுச் சென்றவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடன் –
நாம் வாழ நம்மை அனுமதிக்கும் (தெரியாமல்தான்)
இந்த உலகத்திற்கு செலுத்தும் மரியாதை.
இல்லையென்றால், நம் உலகைத் தூய்மைப் படுத்தி நமக்கு உணவைக் கொடுக்கும் மரங்களை விட நாம் கீழானவர்கள் தான்.
மண்ணை விடக் கேவலமானவர்கள்தான்.
நமக்குப் பின் மண்ணும் மரமும் இருக்கும் –
நாம்தான் மாய்ந்து போவோம்.
எப்படி இருந்தாலும் மாய்ந்து போகும் நாம்
நல்லதை செய்து மாயலாமே – மாயமாகலாமே!
Subscribe to:
Posts (Atom)