Tuesday, 20 December 2011

போராட்ட வருடம் - தமிழ் கழுகுப் பார்வை - 2011 இரண்டு

இந்த ஆண்டு தமிழகத்தைப்  பொறுத்தவரை 
நான்கு  போராட்டங்களைக் கண்டிருக்கிறது. 
அவை நான்கும் மிக முக்கியமான போராட்டங்கள்.

முதலாவது - தமிழக மீனவர் போராட்டம்


"தண்ணிரில் பிழைக்க வைத்தான் பெண்களைக் கண்ணீரில் குளிக்க வைத்தான்" என்று ம. கோ. இராமச்சந்திரன் பாடும் பாடல் வந்து பல வருடங்கள் ஓய்ந்து விட்டது. தண்ணிரில் பிழைக்க மட்டும் இல்லை, தண்ணிரில் சுடப்பட்டு இறந்து மிதக்கும் நிலையும் இருக்கிறதே என்பதில்தான் சோதனை அடங்கியிருந்தது. இயற்கையின் சீற்றத்திற்கு மத்தியில், போராடி வாழும் மீனவர்களுக்கு சிங்கள இனவெறியர்கள் எல்லைப் பிரச்சனைஎன்று கொன்று குவித்த மீனவர்களின் கண்ணிற் வாழ்க்கை கேட்பார் யாருமின்றி - தமிழகம் இந்திய எல்லைக்குள் இருப்பது என்பதை மறந்தே வாழ்கிறார்கள் நாடாளும் அதி புத்திசாலி நண்பர்கள்.

கடந்த மாதம் இருபத்தி எட்டாம் தேதி மீன் பிடிக்கச் சென்ற சிலர் மீது கடத்தல் வழக்கு போட்டு சிறையில் அடித்திருக்கிறது இலங்கை அரசு. கேட்பார் யாருமில்லை. 

பாதிக்கப் படும் பகுதிகள். ராமேஸ்வரம், வேதாரண்யம், நாகப்பட்டினம் என்று இலங்கையை ஒட்டிய பகுதிகள் - இன்னும் சொல்லப் போனால் - தென் தமிழக கடற்கரையோரப் பகுதிகள்.
இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து இலங்கைக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இரண்டாவது - இடிந்த கரை போராட்டம்


"தரை மேல் பிறக்க வைத்தான் - எங்களை கண்ணீரில் மிதக்க வைத்தான்.' என்று கடற்கரையை ஒட்டியவர்கள் மட்டுமல்ல - கடற்கரை தாண்டிய மக்களுக்கும் ஆபத்து விளைவிக்கும் ஒரு மிகப் பெரிய அரக்கன் எப்போதும் தூக்கி நிறுத்திய அணுகுண்டுகளை தயார் நிலையில் வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அது எப்போது வெடிக்கும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். சிங்கள இராணுவமாவது ஏ.கே. 47 என்கிற நிலையில் சிலருடைய வாழ்வோடு முடிந்து போகிற ஒன்று. ஆனால் இது எப்ப வெடிக்கும் எப்படி வெடிக்கும், எத்தனை பேரைக் கொண்டு போகும், எத்தனை வருடங்களுக்கு இருக்கும், எத்தனை தலை முறைக்கு அந்த விளைவுகள் எதுவும் தெரியாது...

இது மட்டுமல்ல - இந்தப் பிரச்சனையோடு பாதுகாப்பு சம்பந்தப் பட்ட விவகாரங்கள் வெளியில் வந்த பிறகுதான் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில்  வெளிவரும் கதிர் வீச்சுகள் பற்றிய உண்மையும் அதோடு சேர்ந்து எந்த அளவிற்கு தமிழகத்தின் வடக்குப் பகுதியும் ஆபத்தில் இருக்கிறது என்கிற உண்மை வெளிவந்தது. ஆனாலும் இந்தப் போராட்டங்களைக் கடுமையாக எதிர்பவர்களும் இல்லாமல் இல்லை.

கல்பாக்கம் பகுதியில் உள்ள கதிர் வீச்சு அபாயங்கள் குறித்து இங்கே அறியலாம்.

பாதிக்கப் படும் பகுதிகள் - தூத்துக்குடி, அதோடு சேர்ந்த கிராம நகரப் பகுதிகள். இவைகளில் தான் ஏற்கனவே பல்வேறு நச்சுப் பொருள்கள் காற்றில் கலந்து விளைவை உருவாக்கும் ஆலைகள் இருப்பதும் கவனிக்கப் பட வேண்டியிருக்கிறது.

மூன்றாவது -  அணை காக்க கேரளாவிற்கு எதிரான போராட்டம்

இதுவும் தண்ணீரை மையப் படுத்திய போராட்டமே - தண்ணீர் இல்லாமல் இறக்க வைக்கிற கொடுமை. ஒவ்வொரு முறையும் தமிழக கேரளா உறவில் ஏதாவது விரிசல் இருந்து கொண்டேதான் இருக்கிறது.

இதைப் பற்றி ஏற்கனவே நிறைய எழுதியாகிவிட்டது.

பாதிக்கப் படும் பகுதிகள் - மீண்டும் தென் தமிழகமே....




முக்கியமான மற்றொரு போராட்டம்
மரண தண்டனைக்கு எதிரானது






மற்ற மூன்று போராட்டங்களுக்கும் இதற்கும் தொடர்பு இல்லாதது போலத் தோன்றலாம். ஆனால் இந்த மரண தண்டனை எதிர்ப்புப் போராட்டம் என்பது தமிழர்கள் என்பதால் - நியாயமற்ற முறையில் வழங்கிய தீர்ப்பு என்கிற வகையில் இது முன்னெடுக்கப் பட்டது.

தமிழக மீனவர்கள் என்பதனால் அரசு எந்த விதமான முயற்சியும் எடுக்க வில்லை.  இடிந்த கரையிலும் ஏற்கனவே கல்பாக்கத்தில் தொடங்கிய அந்த அதே கதிர்வீச்சை தமிழகத் தின் தென் பகுதிகளுக்கு பரப்புவதில் இன்னும் ஆர்வத்தோடு இருக்கிற மத்திய அரசு... முல்லைப் பெரியாறு அணையிலும் - வாய் திறந்த ப. சி கூட வாபஸ் பெரும் விதத்தில் மத்திய காங்கிரசும் கேரளா காங்கிரசும் கூட்டணியில் இருக்கிறது. இவைகள் எல்லாவற்றிலும் தமிழினத்திற்கு எதிரான போக்கே இருக்கிறது என்பதைப் பார்க்கும் போதே இந்த கடைசிப் போராட்டத்தின் உண்மை உங்களுக்குப் புரியலாம்.


இதனால் அறிவது என்னவென்றால்:
இந்த ஆண்டு தமிழர் அழிப்பை பல்வேறு வழிகளில் பலரும் முயற்சி செய்வது போல தமிழர்களின் விழிப்புணர்வும் ஆச்சரியப் பட வைக்கிறது.
எது எப்படியெனினும் - தமிழகத்தை சுற்றி ஆபத்து காத்துக் கொண்டே இருக்கிறது.

இரண்டாயிரத்துப் பதினொன்று - போராட்ட வருடம்

ஆபத்து அதிகமாகிக் கொண்டேயும் இருக்கும் வருடம்.





எத்தனை போராட்டங்கள் என்றால் என்ன தமிழின அழிப்புத் தொடருமா அல்லது வாழ்வு விடியுமா?.


கொசுறு:
இந்த ஆண்டு தொடங்கிய முதற் போராட்டம் தொடங்கி அனைத்துப் போராட்டங்களும் இன்னும் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

ஒரு வேளை - தெலுங்கானா மாதிரி பிரிக்கும் போராட்டம்தான் தீர்வா?????


நன்றி:

அனைத்து புகைப் படங்களும் வலைப் பூக்களின் முகவரி கொண்டு அப்லோடு [தரவேற்றமா?] செய்யப் பட்டிருக்கின்றன. அந்தந்த வலை உரிமையாளர்களுக்கு நன்றிகள்.
தொடரும் ...

3 comments:

  1. தமிழ் மனத்தில் இணைத்த நண்பருக்கு நன்றி.

    ReplyDelete
  2. சிலருடைய போலி முகங்கள் கூட கிழிக்கப்பட்டுள்ளது இந்த போராட்டங்களில்.

    மக்கள் ஒற்றுமையோடு போராடும் இந்த வேளையில், தங்களின் சுய லாபத்துக்காக சில குள்ளநரிகள் குட்டையை குழப்பாமல் இருந்தால்... தமிழகம் நிச்சயம் வெல்லும்... இல்லையேல்... சற்று தாமதமாக வெல்லும்...

    பகிர்வுக்கு நன்றி... நண்பரே...

    ReplyDelete
  3. @இருதயம்

    தாமதமாக பதில் எழுதுகிறேன்...

    உங்கள் ஆட்சேபனை ஏற்றுக் கொள்ளப் பட்டது.
    ஆனால் இவைகளுக்கெல்லாம் என்ன பதில் என்பதை நீங்கள் சொன்னால் நன்றாக இருக்கும்.
    அணுஉலை வைக்க வேண்டும் என்பது உங்கள் கருத்து... மற்ற போராட்டங்களில் உங்கள் கருத்து என்ன என்பதையும் தெளிவு படுத்தினால் விவாதங்களில் நமது கருத்துக்களைப் பகிரலாம்.
    விவாதங்கள் எதிர் விவாதங்கள் ஒரு நல்ல புரிதலைக் கொடுக்கும்தானே..

    ReplyDelete