கணினி [கம்ப்யூட்டர்] ஒருவர் இருவர் என்று இன்று எல்லார் கையிலும் வந்துவிட்டது. அதன் சிறு வடிவமான தொலைபேசியிலும் அதன் தொழில் நுட்பம் பகிரப்பட அது இல்லாமல் வாழ்க்கை இல்லை என்று ஆகி விட்டது. இணையமும் அதனோடு சேர்ந்து விட இந்த சோசியல் நெட்வொர்க்குகள் எல்லா இடங்களிலும் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது.
தொழில் நுட்பத்தின் வேகத்திற்கு என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை. இந்த கால கட்டத்தில் வளர்ந்து வரும் தொழில் நுட்பம் அபரிமிதமானது மட்டுமல்ல மாறாக மிகவும் வேகமாகவும் முன்னேறிக் கொண்டிருக்கிறது.
எப்படிப் பயன்படுத்துவது என்று பார்க்க யு டியூபுக்கு சென்று பார்த்து பயன்படுத்த முயல்வதற்குள் அடுத்த வசதி என்று போய்க் கொண்டே இருக்கிறோம்.
இந்தக் களோபாரத்தில் நண்பர்களிடம் பேசுவது கூட மறந்து போய் விடுகிறது.
இப்ப நான் வெறும் முக நூல் மாட்டருக்கே வந்தர்றேன்.
இந்த முக நூல் புத்தகம் இருக்கிறதே இதனை நானும் இப்போது பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறேன். இடையில் கொஞ்சம் தளர்ந்து போனேன். இருந்தாலும் இந்தத் தளம் எவ்வளவு பயனுள்ளதாய் இருக்கிறது என்பதை எழுதாமல் இருக்க முடியவில்லை. என்னை யாருன்னே தெரியாதவர்கள் கூட எனக்கு நண்பர்கள்.
எவ்வளவு விரைவாக அன்யோன்யமாகிப் போகிறோம். எவ்வளவு நெருக்கமாகிறார்கள். ஒரு நண்பரை உருவாக்கிக் கொள்வது அப்படி ஒன்றும் கடினம் இல்லை.
எவ்வளவு புதிய புதிய நண்பர்கள் எனக்கும் அவர்களுக்கும். நண்பர்களின் நண்பர்கள், அவர்களின் நண்பர்கள்.
முல்லா நாசருதீன் கதையில் வரும் - சூப் ஆப் தி சூப் ஆப் த சூப் ஆப் த --- போல நண்பர்களின் நண்பர்களின் நண்பர்களுக்கு எல்லாம் அறிமுகமாகி இருக்கிறேன். ஹன்சிஹா போட்டோ போட்டதினாலே நான் நண்பராகிறேன் அவரும் உடனே என்னை நண்பராகச் சேர்த்துக் கொள்கிறார்.
அனுஷ்கா புடிக்குமா அதுனால அந்த போட்டோவைப் பாத்துட்டு அதை எழுதுறது ஆனா பொண்ணான்னு கூடத் தெரியாம நண்பராகி விட்ட சந்தோஷத்துல திளைக்கிறேன். அவர்களிடம் சாட் செய்கிறேன், லைக் பண்றேன். ஷேர் பண்றேன்...
ஆனா கொடுமை சார் - அப்பா அம்மாகிட்ட பேச நேரம் இல்லை.
என் ஸ்டேட்டசை நாலு பேரு லைக் பண்ணா அதுவும் சந்தோஷமா இருக்கு. திரையைப் பார்த்து பார்த்து குடும்ப உறுப்பினர்களைக் கூட நேராப் பாக்கிறத விட இப்பல்லாம் கம்ப்யூட்டர் ஸ்க்ரீன்ல பார்க்குறதுதான் புடிக்குது.
அதனால என்ன ஆச்சுன்னா தெரிஞ்ச ஆட்களை விட, எனக்குத் தெரியாத ஆட்களோட பழகுறதுல ஒரு சுகம் கண்டு போனேன். எந்தவித கமிட்மெண்டும் இல்ல பாருங்க. அவன் கஷ்டத்துல பங்கு பெற வேண்டிய அவசியம் இல்லை. என் கஷ்டத்துல 'ஐ ஆம் சாரி' அப்படிங்குற பதிலோட என் நண்பர்களின் கமிட்மென்ட் முடிஞ்சு போகுது. அதுவும் சந்தோஷமாத் தான் தெரியுது.
தன் அண்ணன் பொண்ணு இறந்து விட்டாள் என்று என் நண்பர் போட்டோ போஸ்ட் பண்ணதை நாலு பேரு லைக் பண்றான் சார்.
எத லைக் பண்றதுன்னே விவஸ்தை இல்லாமல் போச்சு. அவ்வளுவு பிஸியாமா! ... அதனால ரெண்டு வார்த்தை கூட எழுத முடியாம போச்சு -
அதுக்காக அதை டிஸ்லைக் பண்ணலாமான்னு ஒரு குரல் கேக்குது - நான் என்ன சொல்றது?

முகமே தெரியாத யாரோ ஒருவருடைய சுவற்றிலேயோ [wall] ஆணியில் அடித்ததை அவர் பகிர்ந்து [share] கொள்ள, நான் அதை விரும்பி [like], என் சுவற்றில் ஒட்டிவிட [post] அதை எனது நண்பர்கள், சில சமயம் நண்பர்களின் நண்பர்கள் என்று எல்லாரும் மீண்டும் லைக், ஷேர், போஸ்ட், லிங்க், சஜ்ஜஸ்ட் என்று மீண்டும் அடுத்த ரவுண்டு நமது சுவற்றிற்கே வந்து விடுகிறது.
உலகம் எவ்வளவு சின்ன உருண்டை. முருகன் சுற்றி வருகிற நேரம் எடுத்துக் கொண்டாலும் பரவாயில்லை. சில சமயம் ஆணை முகத்தான் சுற்றி வரும் நேரத்திற்குள் வந்து விடுகிறது.

இப்ப ஒரு நாளைக்கு இணைய இணைப்பு கிடைக்க வில்லை என்றால் தூங்க முடியலை, சாப்பிட முடியலை.
என் நாலு விட்ட நண்பர் சுவற்றில் என்ன லைக் பண்ணி, ஷேர் பண்ணினார்னு ஒரே யோசனையா இருக்கு!
அனுஷ்கா பொண்ணு தூங்கப் போனுச்சா - அதனோட ஸ்டேடஸ் என்னன்னு தவிக்க விடுது. அதனோட ஸ்டேடசை 650 ஆவதா ஆளா நான் லைக் பண்ணலைன்னா அது தூங்கப் போகுமா போகதாங்கிற கவலை அதுக்கு மேல வாட்டுது.
என் அப்பா மருத்துவ மனையில் இருந்தப்ப கூட இப்படி எல்லாம் மனசு தவிக்கலைங்க. இப்ப இந்தத் தவிப்பு மனுஷனைக் கிறுக்குப் பிடிக்க வைக்குது.

மக்களே! இப்ப கொஞ்ச நாள்லயே தல சுத்துதே... அதுலேயே இருக்குற நண்பர்களுக்கு... ஒரு நாள் முக நூல் புத்தகம் காலியானா எப்படி இருக்கும்னு நினைச்சாலே எனக்கு ஒரே திகிலா இருக்கு....
ஆனா கொடுமையைப் பாருங்க சார் இதைக் கூட நான் முக நூலில் ஷேர் பண்ண வேண்டிய சூழ்நிலைக் கதியாகிப் போனேன்.
கொசுறு:
நண்பர்களே,
நண்பர்களின் நண்பர்களே,
நண்பர்களின் நண்பர்களின் நண்பர்களே -
இந்தப் பதிவென்னமோ சீரியஸா எழுதத் தொடங்கியதுதான்.
பாதியிலேயே ஜாலியா மாறிப் போச்சு.

சரி எழுதுனதுதான் எழுதினோம்
காத்திரமும் பகடியும் சேர்ந்து செய்த ஒரு கலவைப் பின் நவீனக் கட்டுரையாக
இருந்து விட்டுப் போகட்டும் என்று அப்படியே விட்டுவிட்டேன்.

இனி நீங்க --- ஒழுங்காப் பயன்படுத்தணும்... சரியாப் பயன்படுத்தணும். குறிப்பறிந்து நடக்கணும்.
இது ஆல்கஹால் மாதிரி அளவாய்ப் பயன்படுத்தணும்
என்பது போல நல்ல யோசனைகள் இருந்தால்
தயவு செய்து காமென்ட் போடுங்க.
வேற யாருக்கும் இல்லாட்டியும் நிச்சயம் எனக்காவது பயன்படும்.

No comments:
Post a Comment