Tuesday, 9 December 2014
Wednesday, 3 December 2014
கனவு
என்னிடம் சிலர் சொன்னார்கள்
கனவு காணும் உரிமை எல்லார்க்கும் உண்டு...
அதைத் தடுக்கும் உரிமை எவருக்கும் இல்லை...
அதை நம்பினேன்
இது என்ன காவிரியா தடுத்து இரண்டு அணை கட்டுவதற்கு
அல்லது முல்லைப் பெரியாறா 10 அடி குறைத்துச் சேமிக்க..
கனவு மக்களே கனவு...
இதற்கு யாரும் தடுப்பணை கட்ட முடியாது
இதன் உயரத்தையும் யாரும் குறைக்க முடியாது
இதையும் நம்பினேன்
மேலும் சொன்னார்கள்
கனவு காற்றைப் போல எல்லாருக்கும் சொந்தம்...
காற்றைச் சுவாசிப்பவன் உயிர் வாழ்கிறான்
கனவைச் சுவாசிப்பவன் உயரே வாழ்கிறான்...
தொடர்ந்து காற்றையும் கனவையும் சுவாசியுங்கள்...
உயிரோடும் வாழுங்கள்
உயரேவும் வாழுங்கள்
கனவை நனவாக்குங்கள்!
அத்தனையையும் நம்பினேன்
பிறகே உறங்கினேன்
பிறகே உறங்கினேன்
கனவு கண்டேன்
கறுப்புப் பணம் அனைத்தும் திரும்பி வரும் கனவு கண்டேன்
ஏழைகள் இன்புறக் கண்டேன்
ஒன்றிக்கப்பட்ட ஆறுகள் பற்றிக் கனவு கண்டேன்
மொழிப்போர் அற்ற இந்தியாவும்
மதப்போர் அற்ற பாரதமும் கனவு கண்டேன்
எந்த பயமும் இல்லாமல் என் கருத்தை
தெளிவாய்ப் பதிவதாயும் கனவு கண்டேன்
கருத்துச் சுதந்திரம் இருந்தால் வேறென்ன வேண்டும்
இந்த உயரம் போதுமென்றேன்
மெதுவாய் கண்விழித்தேன்
பெட்ரோல் விலை குறைந்ததாய் செய்தி வந்தது
ஆஹா கனவு பலித்து விட்டதா?
இன்னும் பார்த்தேன்
அத்தியாவசிய மருந்துகள் விலை ஏற்றமாம்
அதானிக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் கடனாம்
வங்கிக் கணக்கை நாம் ஆரம்பித்தோம்
அதானிக் கணக்கில் பணமாம்
கறுப்புப் பண கணக்கிருக்கிறது ஆனால் பணமில்லையாம்
நான் ராமரின் மகன் இல்லை என்பேனால் நாட்டிலேயே
எனக்கு இடமில்லையாம்
நான் ராமரின் மகன் இல்லை என்பேனால் நாட்டிலேயே
எனக்கு இடமில்லையாம்
வை.கோ. வை மிரட்டிய எச். ராசா பற்றி
எக்கச் சக்க செய்திகள் - கருத்து சுதந்திரமாம்
போதுமடா சாமி
இன்னும் கொஞ்சம் உயரே கனவு கண்டு
நான் விழித்திருந்தால்
நிச்சயம்
புதிதாய் இரண்டு அணைகள்
இருந்திருக்கும்.
Labels:
அப்துல் கலாம்,
கவிதை
Wednesday, 12 November 2014
நான் ஒரு பிராமணன்
நான் ஒரு பிராமணன். நான் பிராமனாய் இருப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். என்றும் எப்போதும், பிராமணராக வாழ்வதில் அக்கறை கொள்கிறேன் என்று உறுதி மொழி எடுக்கும் விதமாய் பேசி இருக்கிறார், மேன்மை தங்கிய சுப்புரமணி சாமி அவர்கள்.
எந்த ஒரு காலத்திலும், பிராமணர்கள் சொல்லுவதையே ஆட்சியில் இருப்பவர்கள் கேட்டிருப்பதாகவும், அதுவே அவர்களது தொழில் என்பது போலவும் பேசியிருக்கிறார். தான் சொல்லுவதை கேட்பதாகவும், இது மற்ற இலாகாக்களை விட மேலானது என்றும் சொல்லியிருக்கிறார். அதாவது எப்பொழுதும், இந்தியப் பிராமணர்களும், படித்தவர்களும் பதவி வகித்ததில்லை என்றும், தான் சொல்லுவதை மற்றவர்கள் கேட்பதே தனக்குப் போதும் என்றும் தெரிவித்து இருக்கிறார்.
அது மட்டுமல்ல இன்னும் ஒரு படி மேலே சென்று, மோடி அவர்களுக்கு பிராமணிய குணங்கள் இருப்பதால் அவரை பிராமணராக நியமிக்கிறேன் என்றும் தனது ட்விட்டீரில் மொழிந்திருக்கிறார்.
நான் என்ன நினைக்கிறேன்னா?
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சுட்டவும் - மோடி பிராமணர்
நான் இலாகா இல்லை என்பதானால் வருத்தப் படவில்லை.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
எம். எஸ். எஸ் பாண்டியனின் மரணத்திற்கான இரங்கல்.
இப்படி பிரமணித்தின் மேலாண்மை குறித்த விவாதம் மீண்டும் சூடு பிடித்துக் கொண்டிருக்கும் போது, உயர்திரு பாண்டியனின் மரணம் பேரிடியாய் வந்திருக்கிறது.
பிரமணியம், தலித்தியம், மற்றும், சாதியத்தின் பல்வேறு வகையான ஆதிக்கம் பற்றி ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருந்த ஒரு எழுத்தாளர். சுப்ரமணிய சுவாமி போன்றோர் உரத்துக் குரல் எழுப்பும் வேளையில், பாண்டியன் போன்றோர் இன்னும் அதிமாகவும், உரத்த குரலிலும் உண்மையை பதிவு செய்யவும், எதிர்ப்பைத் தெரிவிக்கவும் வேண்டியிருக்கிறது.
அது வெறும் பிரமணிய எதிர்ப்பாக மட்டுமல்ல சாதியத்திற்கெதிரான எதிர்ப்பாகவும் இருக்க வேண்டியது அவசியமாகிறது.
எஸ். வி. ராஜதுரை அவர்களின் கட்டுரை
எந்த ஒரு காலத்திலும், பிராமணர்கள் சொல்லுவதையே ஆட்சியில் இருப்பவர்கள் கேட்டிருப்பதாகவும், அதுவே அவர்களது தொழில் என்பது போலவும் பேசியிருக்கிறார். தான் சொல்லுவதை கேட்பதாகவும், இது மற்ற இலாகாக்களை விட மேலானது என்றும் சொல்லியிருக்கிறார். அதாவது எப்பொழுதும், இந்தியப் பிராமணர்களும், படித்தவர்களும் பதவி வகித்ததில்லை என்றும், தான் சொல்லுவதை மற்றவர்கள் கேட்பதே தனக்குப் போதும் என்றும் தெரிவித்து இருக்கிறார்.
அது மட்டுமல்ல இன்னும் ஒரு படி மேலே சென்று, மோடி அவர்களுக்கு பிராமணிய குணங்கள் இருப்பதால் அவரை பிராமணராக நியமிக்கிறேன் என்றும் தனது ட்விட்டீரில் மொழிந்திருக்கிறார்.
நான் என்ன நினைக்கிறேன்னா?
- எப்பவும் தலித்திய கட்சிகளைக் குறை சொல்லும் மகராசன்கள், சாதியம் ஒன்று இல்லை என்றும், தலித்துகள் பிராமணர்கள் பற்றி சொல்லுகிற கூற்று அனைத்தும் தவறு அல்லது அருதப் பழசு என்று சொல்லுபவர்கள் இதைக் கொஞ்சம் படிக்கணும்னு தோணுது.
- சுப்ரமணிய சாமி மேல பிராமணர்கள் கேஸ் போட்டா நல்லா இருக்குமான்னு சொல்லுங்க - பிராமணர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் பிரமனர்களைப் பற்றி தவறாக, எல்லாரையும், ஆட்டுவிக்கும் கருவிகளாக மட்டுமே சித்தரித்தது தவறு என்று சொல்ல வேண்டிய கட்டாயம்.
- இல்லை அவர் சொல்லியது சரி என்றால், பிராமணர்கள் அல்லாதவர்கள் அறிவற்றவர்கள் என்று ஆகி விடுகிறது. பதவிக்காக ஆசைப் படுபவர்கள் எல்லாம் பிராமணர்கள் அல்லாதவர்கள் என்கிற ஒரு கருத்தையும் திணிப்பது, மற்ற எல்லாரையும் தவறாக சித்தரிப்பதற்கு சமம். அதனால் மற்றவர்கள் அவர் மீது வழக்குத் தொடுப்பது சாத்தியமா என்று யோசிக்கலாம்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சுட்டவும் - மோடி பிராமணர்
நான் இலாகா இல்லை என்பதானால் வருத்தப் படவில்லை.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
எம். எஸ். எஸ் பாண்டியனின் மரணத்திற்கான இரங்கல்.
இப்படி பிரமணித்தின் மேலாண்மை குறித்த விவாதம் மீண்டும் சூடு பிடித்துக் கொண்டிருக்கும் போது, உயர்திரு பாண்டியனின் மரணம் பேரிடியாய் வந்திருக்கிறது.
பிரமணியம், தலித்தியம், மற்றும், சாதியத்தின் பல்வேறு வகையான ஆதிக்கம் பற்றி ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருந்த ஒரு எழுத்தாளர். சுப்ரமணிய சுவாமி போன்றோர் உரத்துக் குரல் எழுப்பும் வேளையில், பாண்டியன் போன்றோர் இன்னும் அதிமாகவும், உரத்த குரலிலும் உண்மையை பதிவு செய்யவும், எதிர்ப்பைத் தெரிவிக்கவும் வேண்டியிருக்கிறது.
அது வெறும் பிரமணிய எதிர்ப்பாக மட்டுமல்ல சாதியத்திற்கெதிரான எதிர்ப்பாகவும் இருக்க வேண்டியது அவசியமாகிறது.
எஸ். வி. ராஜதுரை அவர்களின் கட்டுரை
Labels:
இந்தியா,
சாதி,
பத்திரிக்கை சுதந்திரம்,
விவகாரம்,
விவாதம்
Friday, 17 October 2014
சுத்தம்
இந்த வார இதழின் தலைப்பை என் நண்பர் ஒருவர் சு....த்தம் என்று படித்தார். சுத்தம் என்பதற்கும், சு...த்தம் என்பதற்கும் பல வித்தியாசங்கள் உண்டு. அதை அவ்வளவு எளிதாகச் சொல்லிவிட முடியாது.
இந்தியாவை சுத்தப் படுத்துவது எளிது.
ஆம் ஆத்மி கட்சியின் துடைப்பத்தை கையில் எடுத்து அந்தக் கட்சியைப் பார்க்கும் போதெல்லாம், மாண்புமிகு மோடியின் நினைவு வரும் படி செய்து விட்டது அவரது பலம்.
இந்தியாவைச் சுத்தப் படுத்துதல் நல்லது என்பது உண்மைதான். அது தேவையும் தான்.
சுத்தமான இந்தியா இருந்தால் மருத்துவமனையற்ற இந்தியா என்று வரும் வாய்ப்பும் உண்டு.
ஆனால் முதலில் சுத்தப்படுத்த வேண்டியது ரோட்டையல்ல, நாட்டை. ஊழல் என்பது ஒழிக்கப் பட வேண்டும் என்பதில், முக்கியத்துவம் தர வேண்டும். அதற்கான முயற்சிகளை எடுத்திருக்கிறதா இந்த அரசு?
சுவிஸ் வங்கியில் இருக்கும் பணத்தைக் கொண்டு வர வேண்டும் என்று போராடிய இதே கட்சி அத்தகைய சுத்தப் படுத்துதலை முன்னெடுக்குமா?
அத விடுங்க....
இன்றைக்கும் ரோட்டை, மலத்தைச் சுத்தப்படுத்தும் தொழிலார்களின் நிலையையோ, அள்ளும் மக்களின் அவலம் பற்றியோ பேசிவிடாமல், அதெப்படி சுத்தம் பற்றி பேச முடியும் என்பது தெரியவில்லை.
இந்த வியாபார உலகத்தில், நாட்டைச் சுத்தப்படுத்தல் வெறும் விளம்பரமாக மாறி விடாமல் இருந்தால் சரி.
ஆனால் நமக்கு இந்த விளம்பரம் தான் பிடிக்கிறது. நாட்டைச் சுத்தம் செய்ய பணித்துவிட்டு, நோயாளிகளின் அத்தியாவசிய மருந்துகளுக்கான அரசுக் கட்டுப்பாட்டை தளர்த்தி விட்ட பெருமகனாரைப் பற்றி யாரும் பேசாமல் இருப்பது நல்லாதா?
புற்று நோய், மற்றும் ஹச் ஐ விக்கான மருந்துகள் இப்போது பதினான்கு மடங்குகள் உயர்ந்து விட்டதாக சொல்லுகிறார்கள். எட்டாயிரத்திற்கு விற்ற மருந்து இப்போது இந்த அரசுக கட்டுப்பாட்டைத் தளர்த்திய பிறகு) ஓர் லட்சத்தி ஆறாயிரம் என்று சொல்லுகிறார்கள்.
பன்னாட்டுக் கம்பெனிகளை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறார்கள்.
பாரத நாடு வளம் பெற்று விடும். சுத்தமாயிரும்.
இப்படியே போனால் சு...த்தம்.
Monday, 6 October 2014
எங்கெங்கு காணினும் சக்தியடா !
எங்கெங்கு காணினும் சக்தியடா தம்பி
ஏழுகடல் அவள் வண்ணமடா - அங்குத்
தங்கும் வெளியினிற் கோடியண்டம் - அந்தத்
தாயின் கைப்பந்தென ஓடுமடா!..
- பாரதி தாசன்
##########
நான் என்னையே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். சில சமயங்களில் நடக்கும் நல்லதெல்லாம் உண்மைதானா - என்று உணர்ந்தது கொள்வதற்கு இப்படிச் செய்வதுண்டு. ஆனால் கடந்த இருபத்தி ஏழாம் தேதியிலிருந்து நடக்கும் பல நல்லவைகளை நினைத்துப் பார்க்கும் போது இவைகளெல்லாம் உண்மைதானா என்று என்னையே கிள்ளிப் பார்த்து பார்த்து நகக் கண்கள் உடைந்தே போய்விட்டன. கிள்ளிப் பார்ப்பதற்கு என்னுடம்பில் இடமும் இல்லாமல் போய்விட்டது. எங்கெங்கு காணினும் அம்மாவே! காலை செய்தித்தாட்களில், சாலையில் போஸ்டர்களில், நாள் முழுவதும் தொலைக்காட்சிகளில் என எல்லா இடங்களிலும். ஆளும் கட்சி இடைத்தேர்தல்களில் மட்டுமல்ல, நீதித்துறையை எதிர்ப்பதிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதற்காக எதையும் செய்வதற்குத் தயாராக இருக்கின்றது.
பதிவியில் இருக்கும் போது தண்டனை பேரும் முதல் நபராக மட்டும் அவர் அல்ல. அப்படிப் பதவியில் இருக்கும் போது அந்தத் தண்டனையைக் கூட தனக்கு சாதகமானதாக மாற்றக்கூடிய சக்தியையும் கொண்டவர் என்பதை என்பித்திருப்பதிலும் அவர்தான் முதல்வர்.
இது நீதித் துறைக்கு நல்லதல்ல.
###
ஆளும் கட்சி, தான் எப்போதும் தனது தலைவருக்கு விசுவாசம் உள்ளவர்கள் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது. அதைத்தான் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒன்றுமில்லாமல், ஒரு சில இடங்களில் இருந்த இந்த விசுவாசக் காட்சிகளை தமிழகம் முழுவதும் பரப்பி விட்ட பரப்புரையாளர்கள் நமது செய்தித் தாள்களும், செய்தித் தொலைக் காட்சிகளும்.
பெயருக்கு ஒன்றிரண்டு ஊடகங்களைத் தவிர ஒட்டு மொத்தமாக பத்திரிக்கைகள் இது நீதித் துறையின் வெற்றியாகவோ, அநீதிக்குக் கிடைத்த தண்டனையாகவோ கருதாமல் - சிலரின் சூழ்ச்சிகளால், மாயவலைக்குள் அவர் சிக்கிக் கொண்டது போல சித்தரித்தால், படிப்பவன் என்ன நினைப்பான்? நேற்று தொடங்கி இன்று தண்டனை விதித்தால் அதில் சூழ்ச்சி பற்றிப் பேசலாம். இதில் எப்படிப் பேசுவது? பத்திரிக்கைகள் தங்களது நம்பகத் தன்மையை முற்றிலுமாக அடகு வைத்து விட்டன.
இதன் மூலம் பத்திரிகை சுதந்திரத்தை இவைகள் அடகு வைத்து விட்டன. இது பத்திரிகை தர்மத்திற்கு நல்லதல்ல.
###
ஒட்டு மொத்த சினிமாத் துறையும், ஒருங்கே அமர்ந்து - அல்லது அவ்வாறு இருந்தது போல ஒரு பிரம்மையை உருவாக்கி அதில் நீதி அரசர்கள் அமர்ந்து இருப்பதைப் பார்த்த போது-
ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களை எல்லாம் திருத்தவே முடியாது என்று நமக்கு சொன்ன விவேக் நீதியரசராகத் தெரிந்தார்.
ஊழலுக்கு எதிராக அன்னியனான விக்ரம் நீதியர்சராகத் தெரிந்தார்.
தெய்வத்தை மனிதன் தண்டிக்க முடியுமா
என்ற வசனத்தைப் பார்த்த போது
ஐயகோ
எந்த வசனகவிக்கும் தோன்றாத இந்தச் சிந்தனை எந்த நீதியரசருக்குத் தெரிந்தது என்று உள்ளுக்குள்ளே
குடைந்து எடுத்து விட்டது.
இவர்கள் ஏன் நீதியர்சர்களாகவோ, அடுத்த முதல்வர்களாகவோ வரக்கூடாது?
இந்தப் போக்கு சினிமாவிற்கும் நல்லதல்ல
தமிழகத்துக்கும் நல்லதல்ல.
###
அன்னைக்கு ஆதரவாக தனியார் பள்ளிகள் மூடப்படும் என்று அறிக்கை விட்டு மீண்டும் அதை வாபஸ் செய்தது / நீதித் துறைக்கான முடிவுகளில் பள்ளிகள் தலையிடுவது ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டிய பள்ளிகள் தடம் புரள்கின்றன என்பதையே காட்டுகிறது. இது நல்லதல்ல.
###
கட்சி ஆட்சியில் இருக்கும் போது அதன் தலைவர் சிறை பிடிக்கப்பட்டால் இது போன்ற நிகழ்வுகளை எல்லாம் இனிமேல் சர்வ சாதரனமாய்ப் பார்க்கலாம். இந்த நிகழ்வுகளெல்லாம் நமக்குள் பல கேள்விகளை கொடுக்கின்றன.
பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விடயங்கள் இன்றைய இளைஞர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. வரலாறு தெரியாமல் இருந்தால் என்னென்ன பாதகங்கள் நிகழும் என்பதற்கு இதுவே சாட்சி. ஆனால் பத்திரிகைகளுக்குத் தெரியவில்லை என்பது மிக ஆச்சரியமானதே! வரலாறு தெரியாமல் இருக்க முடியுமா?
ஜனநாயக நாட்டில், மக்கள் போராட்டங்கள் என்பது அவர்களுக்கான உரிமை. ஒரு ஊழல் வாதியை தங்களது தலைவர்களாக ஏற்றுக்கொள்வது அவர்களது சுதந்திரம். அதில் தலையிட நாம் யார். அதற்காக சாதாரண மக்களை துன்பத்திற்கு ஆளாக்குவதை யாராவது அவர்களது உரிமை என்று சொல்லிவிட முடியுமா?
இத்தைகைய போக்கு, இன்றைய தேதியில் ஆயிரக்கணக்கான கோடிகள் அளவிற்கு ஊழல் செய்தவர்களுக்குச் சாதகமாக இருக்குமே தவிர வேறு யாருக்கும் எந்த வித நன்மையையும் செய்து விட முடியாது. இனிமேல் ஊழல் வழக்குகள் என்று வந்தால் அதனால் தண்டிக்கப் படப போவது சாதாரண ட்ராபிக் கான்ஸ்டபிள்கள் மட்டுமே. பழம் தின்னிக் கொட்டைகள் எல்லாரும் மிகச் சாதரணமாய் ஒரு பேருந்தை எரிப்பதன் மூலம் தப்பித்து வரமுடியும். அறிவாளிகள், தாங்கள் ஆட்சியில் இருக்கும் போதே தங்கம் மீதான வழக்குகளை எதிர் கொண்டு இலகுவாக வெளியே வந்து விட முடியும்.
ஊழல் வழக்குகள் தவறு என்று சொல்லிவிட முடியுமா?
தவறு செய்தவர்கள் திருந்தலாம். இல்லையென்று மறுப்பதற்கில்லை. அதற்காக செய்த தவறுகளுக்கு தண்டனை இல்லை என்று சொல்ல முடியுமா?
###
மூடர்கள் இருக்கும் வரை ஊழல் பேர்வழிகள் உருவாகிக் கொண்டே இருப்பார்கள்.
###
துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா? -
அறமி தென்றும் யாம் மறமி தென்றுமே
அறிகி லாத போது - யாம்
அறிகி லாத போது - தமிழ்
இறைவ னாரின் திருக்குறளிலே ஒருசொல்
இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ
இயம்பிக் காட்ட மாட்டாயா?
பாரதிதாசன்
Thursday, 11 September 2014
Subscribe to:
Posts (Atom)
