Wednesday, 22 April 2020

அஞ்சலி - Dr. சைமன் ஹெர்குலஸ்


அஞ்சலி 

மருத்துவர் சைமன் ஹெர்குலஸ் 
                மனிதராய்ப் பிறந்த கடவுளை
            அவர்கள் எற்றுகொள்வதே இல்லை..

இயேசு - மனிதராய்ப் பிறந்த கடவுள்

மாலையானவுடன் மக்களின் பசியைப் பார்த்து
ஓடிப் போங்கள் என்று சொல்ல வில்லை
சூம்பிய கையனைப் பார்த்து
ஓய்வு நாள் என்று சொல்லி 
வீட்டிற்குள் முடங்கிக் கிடக்க வில்லை
தொழு நோய் என்றாலும் 
தொட்டுக் குணமாக்கினார்… 
      பின் ஏன் அவர்கள் அவருக்கெதிராக கல்லெறிந்தார்கள்?
      ஏன் அவரது ஆடைகளைக் களைந்தார்கள்?
          ஏன் ஆனிகளால் அறைந்தார்கள்?

ஏனெனில்
மனிதராய்ப் பிறந்த கடவுளை
அவர்கள் எற்றுகொள்வதே இல்லை..

நீ மருத்துவர்
மருத்துவராய்ப் பிறந்த கடவுள்

நோயாளிகள் தனக்கு சளி, இருமல் என்றவுடன் 
நீ அவர்களை ஓடிப்போகச் சொல்லவில்லை
இருமலோடு வந்தவரைப் பார்த்து 
ஊரடங்கு என்று சொல்லி நீ ஓடி ஒளிந்து  கொள்ளவுமில்லை.
தொற்று நோய் என்றாலும்
தொட்டுப் பார்த்தாய்
பிறர் உடல் தொட்டு
உன் உடல் கெட்டு
உன் உயிரைக் கொடுத்தாய்?
உயிரற்ற பிணமாய்ப் போனாய்.           
 பின் ஏன் அவர்கள் கட்டைகளைஏந்தினர்?
 கற்களை எறிந்தனர்?
வண்டியை உடைத்தனர்?
 மண்டையைப் பிளந்தனர்?

ஏனெனில்
மனிதராய்ப் பிறந்த கடவுளை
அவர்கள் எற்றுகொள்வதே இல்லை..

ஹெர்குலஸ் - ஜேயுஸ் - சின் மகன்
                    சைமன் ஹெர்குலஸ் நீ இயேசுவின் மகன்
இயேசுவுக்கு நடந்தது உமக்கு நடக்காமலா?

காலம் மாறினாலும் 
காட்சிகள் மாறுவதில்லை.

இறை மனித இயேசுவை
கல்லறைக்குள் வைத்து 
காவல் காத்தார்கள்
அவர் உயிர்த்தார்


உன்னையோ
கல்லறைக்குள் விடாமல்
காவல் காத்தார்கள்

நீயும் உயிர்ப்பாய்

11 comments:

  1. "உன்னையோ
    கல்லறைக்குள் விடாமல்
    காவல் காத்தார்கள் …"


    இந்த வரிகள் வலிகளை சுமந்து வருகின்றன.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்

      Delete
    2. வலிகள் மிகுந்த உண்மையான வார்த்தைகள்

      Delete
  2. பிதாவே ! இவர்களை மன்னியும்...இவர்கள் செய்வது என்னவென்று தெரியாமல் செய்கிறார்கள்...

    ReplyDelete
    Replies
    1. செபிக்கிறேன்

      Delete
  3. Though our words can do little we hope our thoughts and prayers to Lord Jesus will support Simon family at this time.

    ReplyDelete
  4. "மனிதராய்ப் பிறந்த கடவுளை
    அவர்கள் எற்றுகொள்வதே இல்லை"

    உண்மை.

    கடவுளை கற்பனையில் படைத்து
    கல்லில் வடித்தவன்
    மனிதராய்ப் பிறந்த கடவுளை
    எற்றுகொள்வதே இல்லை

    ReplyDelete
    Replies
    1. ஏற்றுகொள்ளப்படாத கடவுளர்கள் நமது நாட்டில் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள்

      Delete
  5. இறுதி வரிகள் வலிமையாகவும் வலியாகவும் உள்ளது.
    Let his last wish be fulfilled and our prayers for his family.

    ReplyDelete
  6. உணர்வின் வலி வார்த்தையின் வலியை விட தீவிரமானதில்லையா???

    அதில் பாதியையாவது வார்த்தை கொண்டு வரவேண்டுமல்லவா???

    ReplyDelete