Tuesday, 31 August 2010

உலகத்தின் நோக்கம் 2

அறிவாளி சொல்கிறார்:
இயற்கைக்கு நோக்கம் என்றெல்லாம் ஒன்றும் இல்லை, அதை நாமாகத் திணிக்கிறோம்.
எப்படி கடவுள் என்ற ஒன்றை நாம் கற்பிக்கிறோமோ அதுபோல இயற்கைக்கும் நாம் நோக்கத்தைக் கற்பிக்கிறோம்.

இயற்கை என்பது கல்லும் மண்ணும் சார்ந்த திடப் பொருள்.
consciousness என்பதோ அறிவு என்பதோ அல்லது அன்பு என்பதோ எதுவும் கிடையாது.
நாமாக இயற்கையைத் தாய் என்கிறோம்.
ஈர்ப்பின் படியோ அல்லது எப்படி வாழ முடியுமோ அப்படி அவைகள் இருந்தன. எனவே அதனடிப்படையில் உயிர்கள் வாழ்ந்த போது அவைகள் விதி முறைகளை உருவாக்கிக் கொண்டன. அல்லது - விதிமுறைகள் அதைத் தொடர்ந்து உருவாயின. அதாவது ஒரு விதியின் படி அவைகள் உருவாகவில்லை. அவைகள் உருவானதைத் தொடர்ந்து விதிகள் உருவானது.

எனவே இயற்கை என்பதும் நாமும் இருந்திருக்க வேண்டியதே இல்லை.
அதாவது நாம் இருப்பது - இருக்க வேண்டிய அவசியமில்லை - அதுவாக நடந்தது.

மரங்கள் ஏன் இருக்கின்றன?
அவைகள் இருக்கின்றன. அவ்வளவே?

மலைகள், ஆறுகள், தண்ணீர், மழை, எதற்கும் நோக்கம் இல்லை -
அவைகள் இருக்கின்றன எனவே அதற்கு நோக்கம் இல்லை.

ஆடு மாடுகள், விலங்குகள், இன்ன பிற உயிரினங்கள் இவைகள் எல்லாம் - survival of the fittest - டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

இதுவரைக்கும் எல்லாம் நன்றாகத்தான் இருக்கின்றது.

அப்ப மனிதன் யாரு?

மனிதனும் அப்படித்தான்.

மனிதனும் ஒரு விலங்கினம் என்கிற ரீதியில், அவனும் அப்படியே.
எப்படி விலங்கினங்களுக்கு நோக்கமில்லையோ அப்படியே
அவனுக்கென்று ஒரு நோக்கம் இல்லை.
அப்படியெனில், மனிதன் எந்த விதத்திலும் உயர்ந்தவனில்லை.
அவனுக்கும் நோக்கம் இல்லை.
இயற்கையின் மீது நாம் நோக்கம் கற்பிப்பது போல நமக்கு நாமே நோக்கத்தை கற்பித்து கொள்கிறோம்.

இந்த இடத்தில்தான் சிக்கலே.
நாமும் அதைத்தான் சொல்கிறோம். மனிதன் எந்த விதத்திலும் உயர்ந்தவனில்லை. எனவே எந்தவிதத்திலும் நாம் இதை அழிக்கவோ, பரந்து விரிந்த உலகத்தை சொந்தம் கொண்டாடவோ அருகதையற்றவர்கள்.

ஆனாலும் ஏன் நாம்தான் உயர்ந்தவர்கள் போல எல்லாவற்றையும் நமக்குக் கீழ் கொண்டுவர முயல்கிறோம்?

சரி - இதற்குப் பின்னால் வருவோம்.





மேலும்....

No comments:

Post a Comment