Sunday, 1 January 2012

கனவு மெய்ப்பட வேண்டும் - 2012


கனவு மெய்ப்பட வேண்டும். 
மார்டின் லூதர் கிங்கின் கனவோ, பாரதியின் கனவோ, அல்லது கலாமின் கனவோ மட்டும்தான் மெய்ப்பட வேண்டுமென்றில்லை.


நம் ஒவ்வொருவருக்கும் சில கனவுகள் இருக்கும். இல்லைஎன்று மறுப்பதற்கில்லை. எல்லா சமயங்களிலும் அது வெறும் தொழில் சார்ந்த அல்லது என்ன வாங்குவது என்கிற கனவுகளையும் தாண்டி இருக்கும்.


அந்தக் கனவுகள் மெய்ப்பட முயல்வோம். 
வெறும் கனவுகள் என்ன செய்யும்.



புத்தாண்டு வாழ்த்துக்கள்.


"கனவு மெய்ப்பட வேண்டும்
கை வசமாவது விரைவில் வேண்டும்
...

கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்"

-பாரதியார்  


கொசுறு:
இந்தப் புத்தாண்டை நாம் கொண்டாடுவதில் அதிகமான ஈர்ப்பு இருந்ததில்லைதான்.  உலகம் முழுவதும் கொண்டாடுகிற இந்த நாளில் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்ளுவது தப்பில்லை என்றே கருதுகிறேன்.
என்ன தைக்கு மீண்டும் சொல்லிவிட்டால் போகிறது.

HAPPY NEW YEAR
 
Glückliches neues Jahr 
 Bonne année

3 comments:

  1. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.கனவு எல்லோருக்கும் பொதுவானதாகவே இருக்கிறது.இதுவரை.அதன் விகிதாச்சாரங்களில்,அளவுகளில் வேண்டுமானால் வித்தியாசம் இருக்கலாம்.ஆடு மேய்க்கிறவர்களிலிருந்து,,,,,,,,,,வரை எல்லோருக்கும் கனவுண்டு.வாழ்க்கையுண்டு,படிப்புண்டு,சிந்தனையுண்டு,அறிவுண்டு,அவைகளின் ஒட்டு மொத்த கலவைகளே கனவுகளை நனவாக்க வைக்கிறது,கனவுகள் எப்பொமுதும் கனவாங்களுக்கும்,அறிவுலகவாதிகளுக்கு மட்டுமே சொந்த இல்லை.நல்ல பதிவு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வணக்கம் அப்பு!பிறந்திருக்கும் புத்தாண்டில் முதல் தடவை உங்கள் தளத்துக்கு வந்திருக்கிறேன்!ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!///உலகம் முழுவதும் கொண்டாடுகிற இந்த நாளில் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்ளுவது தப்பில்லை என்றே கருதுகிறேன்.
    என்ன தைக்கு மீண்டும் சொல்லிவிட்டால் போகிறது.////என்ன ஓர் ஒற்றுமை?????

    ReplyDelete
  3. இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete