Friday, 13 January 2012

சமாதியான சங்கமம்

ஏன் இந்தப் புறக்கணிப்பு? 

  • வரலாற்று தொன்மை மிக்க குழுமம் ஒவ்வொன்றும் தங்களுடைய தனிப்பட்ட தன்மையைத் தக்க வைப்பதற்கு எல்லா வழிகளிலும் முயற்சி செய்யும். அது மற்றவர்களை விட நாம் மேலானவர்கள் என்பதற்காக அல்ல. தங்களுடைய தனிப்பட்ட கலாச்சாரக் கூறுகளை பாது காப்பாதற்கும் தங்களது தனித்துவத்தை அடுத்த தலை முறைக்கு விட்டுச் செல்வதற்கும்.

வரலாறு இல்லாத பண்பாட்டுக் குழுமங்கள் கூட தங்களது பண்பாட்டுக் கூறுகளை காட்சிப் படுத்துவதிலும், அதை மியூசியங்களில் வைப்பதிலும் காட்டுகிற அக்கறை அதிகம் என்பதை அவர்கள் சேமித்து வைத்திருக்கிற ஐநூறு ஆண்டு பழமையான கல், மண் இவைகளைப் பார்த்தாலே தெரிந்து விடும். இங்கே என்னடாவென்றால், பழைமையான பண்பாட்டு நகரம் தண்ணிரில் இருக்கிறது.


  • மிச்சம் மீதி உள்ள பண்பாட்டுக் கூறுகளை காப்பதில் ஏதாவது அக்கறை இருக்கிறதா என்பதே மிகப் பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. தமிழகத்தில் நாட்டுப் புறக் கலைகள் அருகி வருகின்றன என்பதும், அதில் இருக்கும் கலைஞர்கள் நலிந்து அந்த ஆடல், பாடல் கலைகள் அழிந்து வருகின்றன என்பதும், இதனால் தங்கள் கலைகளை விட்டு வேறு தொழிலுக்கு சென்று விடும் சூழல் இருப்பதும் நாம் அறிந்ததே.

சங்கமம் - யார், எதற்கு, அதில் என்ன சிக்கல் என்பதையும் தாண்டி, சங்கமம் மீதான என் கருத்து வேறுபாடுகளையும் தாண்டி எனக்கு அதன் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது.

அதனால், சில பல கலைஞர்கள் பொங்கல் நாட்களில் பணம் பெற்றார்கள் என்பதையும் தாண்டி - இந்தப் பண்பாட்டின் சில கூறுகளை உயிர்ப்போடு இருக்க அது உதவியது என்பதில் ஐயம் இல்லை.

ஆட்சி மாற்றம் - வழக்கம் போல பண்பாட்டுக் கூறுகளை காப்பதில் தனது பங்கை காக்க மறந்து விட்டது என்றே கருதுகிறேன். இன்னமும் காழ்ப்புனர்ச்சியிலேயே அரசு நடந்தது கொண்டிருக்கிறது. கடந்த அரசு - இதை தமிழக சுற்றுலாத் துறை இணைந்து நடத்தியதாக நான் நினைக்கிறேன். எனக்குத் தெரியவில்லை. ஆனால் இந்த அரசு தமிழகப் புத்தாண்டை மாற்றியது வேறு விஷயம். அதற்காக 'கலை விழாக்களை' புறக்கணித்தது பற்றி மிகுந்த கோபம் உண்டாகிறது.
இன்றைக்கு சங்கமம் என்பது ஏதோ காணக் கூடாத வார்த்தை போல எங்கும் எதிலும் காணோம். என்ன ஆயிற்று?


  • ஜனவரி மாதம் எப்படி புத்தகக் கண்காட்சி நினைவுக்கு வருமோ அதுபோல 'கலை வாரம்' என்கிற சங்கமும் இருந்தது. ஆட்சி மாற்றத்தினால் புத்தகக் கண்காட்சி நடக்குமோ நடக்காதோ என்கிற சில விவாதங்கள் வந்த பொது இது நிச்சயம் நடக்கும் என்கிற நம்பிக்கை இருந்தது. அதே போலத்தான் சங்கமம் பற்றியும் நினைத்தேன். ஆனால் அந்த நம்பிக்கை பொய்த்துப் போனது.

கடந்த ஆண்டு வரைக்கும் போட்டி போட்டு எழுதிய பத்திரிக்கைகள், இலக்கிய வாதிகள், கிண்டல் அடித்தவர்கள், கவிதை வாசித்தவர்கள், பாடியவர்கள், ஆடியவர்கள் .... யாரும் எதுவும் பேச வில்லை என்பது மிகவும் வெட்கித் தலை குனிய வேண்டிய செயல்.

ஒருவேளை சங்கமம் புத்தாண்டைப் போல ஏப்ரலுக்கு மாற்றப் பட்டிருக்கிறதோ அல்லது நாம் முட்டாள்களாக்கப் பட்டிருக்கிறோமா என்பதை யாரிடம் கேட்பது.?

ஆமாம்!!!
 தமிழக அரசுக்கு ஏன் தமிழர்கள் மீது வெறுப்பு?

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°


ஏன் இந்த வெறுப்பு?


  • கடந்த முறை தமிழக மீனவர்கள் கச்சத்தீவில் மீன் பிடிக்க உரிமை இல்லை என்று சொன்ன மத்திய அரசு இந்த முறை, மத்திய தணிக்கைக் குழு சரி என்று சொல்லிவிட்ட பிறகு மாநில அரசுக்கு அதைத் தடை செய்ய உரிமை இல்லை என்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் திருவாய் மலர்ந்திருக்கிறது.

படத்தை தடை செய்வதில் எனக்கும் உடன்பாடு இருந்ததில்லை என்பது வேறு விஷயம். ஆனால் இதில் மட்டும் மாநில அரசுக்கு உரிமை இல்லை என்று வியாக்கினம் பேசுகிற மத்திய அரசு, உச்ச நீதி மன்றம் முல்லைப் பெரியாரில் நீர் மட்டத்தை உயற்றுவதற்கு உத்தரவிட்ட பின்பு கேரள அரசு தனியாக ஒரு சட்டம் இயற்றியதே.... அதைப் பற்றி என்றாவது திருவாய் திறந்திருக்கிறதா...

ஆமாம்!!!
மத்திய அரசுக்கு என் தமிழர்கள் மீது இந்த வெறுப்பு?

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°


கொசுறு:

"குட்டக் குட்ட நீ குனிந்தால் உலகத்தில்
குட்டிக் கொண்டேதானிருப்பான் - முரசு
கொட்டி எழடா உன் பகைவன் பிடரியில்
குதிகால் பட ஓடிப் பறப்பான்!"

- காசி அனந்தன்


தொடர்புடைய இணைப்புகள்:

சென்னை சங்கமம்

இந்த வாரப் பூச்செண்டும் திட்டும் 


4 comments:

  1. பெயரில்லா14 January 2012 at 12:31

    http://www.amanushyam.com/2012/01/999_4259.html

    ReplyDelete
  2. கனிமொழி, ஜகத் கஸ்பர் ஆகிய தனி நபர்களை கலை,கலாச்சாரம், தமிழ் ஆகியவற்றின் பெயரால் முன்னிறுத்தியதே இந்நிலைக்கு காரணம் என்பது தெரியாதா?

    தமிழ்ப்புத்தாண்டு ,பொங்கல் வாழ்த்துகள்.!

    2008 இல் எழுதிய இப்பதிவையும் ஒரு முறைப்பார்க்கவும்.

    தை ஒன்று தமிழ்ப்புத்தாண்டு பின்னணி ஒரு மாற்றுப்பார்வை

    ReplyDelete
  3. @வவ்வால்
    வணக்கம் வௌவால்,
    உங்களடைய மீள் பதிவைப் படித்தேன்.
    மிக அற்புதமாக மற்றும் சிம்பிளாகவும் எழுதியிருக்கிறிர்கள்.
    நன்றி.
    இதை தமிழக முதல்வரும் பார்வைக்கு அனுப்பி வைக்கலாம்.

    அப்புறம்.
    தனி நபர்களை முன்னிறுத்துதல் சரியல்ல என்பதில் எனக்கும் உடன்பாடு உண்டு.
    சில தனி நபர்கள் ஒரு செயலை முன்னேடுத்ததற்காக
    ஒரு பண்பாட்டு விழாவைச் சிதைப்பது சரியில்லையே.
    தமிழகச் சுற்றுலாத்துறைக்கு ஆட்களும் இயக்கங்களும் இல்லாமலா போய் விட்டது?

    ReplyDelete
  4. மத்திய அரசுக்கு என் தமிழர்கள் மீது இந்த வெறுப்பு?

    The Answer..Guaranteed MP seats sponsored by ADMK/DMK.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
    பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete