Friday, 11 November 2011

11/11/11 அன்று 11 மணி 11 நிமிடம் 11 வினாடி ["நேர அரசியல்" ]

பதினோரு மணி பதினோரு நிமிடம் பதினோரு வினாடி - இது இந்த ஆண்டின் இன்றைய சிறப்பான தருணம் என்று எப்படியெல்லாமோ எழுதிக்கொண்டிருக்கிறார்கள். சில நடிகர் நடிகைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. யார் யாரென்பது உங்களுக்கே தெரியும்.

  • உண்மையில் அந்தச் சிறப்பை எந்த ஆண்டுகளும் பெற்றிருக்க வாய்ப்பு இல்லை. ஏனெனில் வருடங்களைக் கணக்கிடுவது என்பது வரலாற்றில் மிகவும் தாமதமான ஒன்று.  இன்னும் சொல்லப் போனால் ஒவ்வொரு பண்பாட்டை சார்ந்த நண்பர்களும் அவர்களுக்கென்று ஒரு காலண்டரை வைத்திருக்கிறார்கள். எனவே கணக்கிடுதல் முறையில் மிகவும் பழமையான முறை கொண்டிருக்கிற காலண்டர் அடிப்படையில் வேண்டுமானால் இதைப் பற்றி யோசிக்கலாம்.
ஆனால் அது இன்னும் பல்வேறு குழப்பங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் காரணமாக ஆகலாம்.

  • சரி இப்போது நாம் பின்பற்றுகிற காலண்டர் முறை என்பதையே உண்மை என்று கணக்கில் கொண்டாலும், இப்படி எல்லாம் ஒன்று ஒன்றாக வந்தது என்றால் ஜனவரி ஒன்று, பதினொன்றாம் ஆண்டு; அந்த ஆண்டே  நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி மற்றும் பதினொன்றாம் தேதி.... : அல்லது நூற்றிப் பதினொன்றாம் ஆண்டு;
இன்னும் மிகச் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் ஆயிரத்து நூற்றிப் பதினொன்றாம் ஆண்டு: நவம்பர் பதினொன்று...

மற்றதெல்லாம் உல்டாதானே -
நாமாக இரண்டாயிரத்திப் பதினொன்றை வெறும் பதினொன்றாகச் சுருக்கி விட்டு -
அப்படிப் பார்த்தால் ஒவ்வொரு ஆண்டும்தான் நவம்பர் வருகிறது - வெறும் பதினொன்று பதினொன்று என்று ஏதாவது சிறப்பு உண்டா?
சரி ஆண்டே வேண்டாமே: ஒவ்வொரு மாதமும் பதினொன்றாம் தேதி வருகிறது.
ஒவ்வொரு நாளும்தான் பதினோரு மணி வருகிறது - இரண்டு முறை...

  • என்ன ஒரே பிரச்சனைன்னா --- இந்தத் தேதி வெள்ளிக்கிழமை வந்தாதான் பிரச்சனை: ஏன்னா அன்னைக்கு ராகு காலம் பத்து முற்பதிலிருந்து பனிரெண்டு வரையாம்ல.

  • ஆஹா - இன்னைக்கு வெள்ளிக் கிழமை - பதினொன்னு பதினொன்னு பதினொன்னு பதினொன்னு நல்ல நேரம்னு நினைச்சேன்!

ஏதாவது பரிகாரம் இருந்தா சொல்லுங்க?

  • இல்லைன்னா சிறப்பான நேரம் இரவு பதினோரு மணி பதினோரு நிமிடம்னு நினைச்சுக்குங்க...

கொசுறு:


"யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா"

                                                                                        இது "சம்பந்தரின் மாலை மாற்று" 
[இதை நீங்கள் கீழிருந்தும் படிக்கலாம் - அதே வார்த்தைகள் அதே பொருள்]

இதன் அர்த்தம் - 
"சீர்காழியில் குடிகொண்டு, பாம்புகளை அணிகலனாகக் கொண்ட, வீணை வாசித்து கொண்டிருக்கும் ஒப்பிடமுடியாத சிவனே - மக்களின் குறை தீர்ப்பவனே " என்று பொருள் என்று கருதுகிறேன்.


எனது மொழிபெயர்ப்பு முழுமையானதாக இல்லை...


மேலும் விபரம் அறிய: 



3 comments:

  1. ராகு காலத்தில் நல்லது பண்ணலாமாம் சாமி... அப்படின்னு புது ஜோசியர் ஒருத்தர் கிட்ட கேட்டு தெரிஞ்சிகிட்டேன்.. போதுமாங்க... அட வாங்க நமக்கு இதை விட முக்கியமான வேலை நிறைய இருக்கு

    ReplyDelete
  2. நான் புண்ணியம் என்ற ஒன்றை படைத்திருந்தால் தானே... பாவம் என்ற ஒன்றும் உருவாகி இருக்கும்...
    -பகவத்கீதை. ஸ்ரீகிருஷ்ணர்

    மனிதனை பொருத்த வரை அவன் (ஆழ்மனதில்)மனம் எந்த நேரத்தை, நாளை, அவன் எதுவாக நினைக்கிறானோ அதுவாகவே அவனுக்கு அமைந்துவிடுகிறது.

    தவறு நடந்துவிட்டால் மட்டும் சிலர் இறைவனை கடிந்து கொள்கிறார்களே... இதில் இறைவன் எங்கே வந்தார்?

    ReplyDelete
  3. @ராஜா MVS

    உங்க கேள்வி சரிதான் -
    இறைவன் எங்கே வந்தார்?

    என் பதிவில் சிவன் வந்தது
    அந்தச் செய்யுளின் பெருமைக்காக... மட்டுமே..
    "மாலை மாற்று"

    ReplyDelete