Tuesday, 15 November 2011

அடுத்த "சாமி" - நம்ம ஊரிலிருந்து

தமிழர்களை இழிவு படுத்துவதற்கு வேறு யாரும் வெளியிலிருந்து வர வேண்டாம். அரசுப் பதவியில் இருக்கும் தமிழர்களே போதும்.
"இந்த ஆண்டின் தொடக்கத்தில், புதுச்சேரியில் ஒரு அமைச்சர் மக்களிடம் வாக்குச் சேகரிக்கும் போது - "இங்கே உங்களுக்கு குழந்தைகளைத் தவிர அனைத்தையும் கொடுத்திருக்கிறோம்" [நேற்று குழந்தைகள் தினம்] என்று சொல்லி வாங்கிக் கட்டிக்கொண்டார். 

நான் ரொம்ப நாகரிகமாகச் சொல்லியிருக்கிறேன் - தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால் - "நாங்க ஒன்னே ஒன்னுதான் குடுக்கலை - குழந்தை பெத்துக் குடுக்கலை அவ்வளவுதான் மத்ததெல்லாம் குடுத்தாச்சு."




புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட இதே மாண்புமிகு வி. நாராயணசாமிதான்  - நேற்று திருவாய் மலர்ந்து  - கூடங்குளத்தில் "தொடர்ந்து இந்தப் போராட்டக் காரர்கள் போராடுகிறார்கள் என்றால் அவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்பதைக் கண்டுபிடிக்க உள்ளோம்." என்று சொல்லியிருக்கிறார். மக்கள் குடுத்தால் கணக்கு காமிக்க வேண்டாமா -- என்பது போன்ற நிறைய விஷயங்கள் சொல்லி மக்களின் அறிவுக் கண்களைத் திறந்திருக்கிறார்.

மேலோட்டமாய்ப் பார்த்தால் ஒன்றும் தவறில்லைதான். ஒரு போராட்டத்தை உடைக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதைச் செய்யத்தானே அரசு செய்யும்.அதைச் செய்யாமல் இருந்ததால்தானே ஆச்சரியம்.

மஞ்சள் காமாலை வந்தவனுக்கு பார்க்கிறதெல்லாம் மஞ்சளாத்தான் தெரியுமாம். அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு, இவர்கள் கூப்பிடிகிற போதெல்லாம்  பணம் கொடுத்துதான் மக்களை அழைத்து வருகிறார்களா? இன்று வரை அயராது உழைத்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ்கார நண்பர்களே ஒவ்வொரு முறை காங்கிரஸ் தலைவர்கள் அழைக்கும் போதெல்லாம் இப்படித்தான் போனீர்களா? அல்லது சுதந்திரப் போராட்டத் தியாகிகளே எல்லாம் ஒவ்வொரு போராட்டத்திற்கும் மக்கள் கொடுத்த பணத்திற்கு ஆங்கில அரசிடம் கணக்கு கான்பித்திர்களா...  நமது அரசு ஒன்றும் ஆங்கில அரசு இல்லைதான்... கணக்கு கேட்டா காட்டிட்டுப் போறாங்க... எப்போத் தாக்கல் செய்ய வேண்டுமோ அப்போது செய்வார்கள் என்றே நம்புகிறேன்  - யாரிடமிருந்து பணம் வந்தாலும் அவர்களுக்குக் கணக்குக் கொடுக்கவாவது அவர்கள் கணக்கு வைத்திருக்க மாட்டார்களா என்ன?

அல்லது எப்படிப் பணத்தை தண்ணியை செலவழித்தாலும் இப்படி தொடர் போராட்டத்துக்கு அழைத்தால் காங்கிரஸ் தொண்டர்கள் கூட வருவதில்லையே - அப்படின்னு கோவத்துல சொல்றாரா மாண்புமிகு அமைச்சர்?

மாண்புமிகு அமைச்சர் என்ன நினைக்கிறார் என்று நான் நினைக்கிறேன் என்றால் - மக்களுக்கு யாரும் அறிவில்லை. தன் சந்ததிக்காகவும், தன் வாழ்க்கை பாதுகாப்பிற்காகவும் போராடுவதற்கு மக்கள் வரமாட்டார்கள்.  மக்களுக்கு பொது நலம் என்பதே இல்லை - அதன் அடிப்படையில் ஒரு போராட்டத்திற்காக பணம் கொடுக்கிற நிலையில் மக்கள் இல்லை - அதற்காகத்தானே பெட்ரோல் முதற்கொண்டு மற்றும் எல்லா அத்தியாவசியப் பொருட்கள் விலை வரை ஏற்றி வைத்திருக்கிறோம். இதையெல்லாம் தாண்டி எப்படி மக்கள் போராட்டத்திற்கு வருவதோ அல்லது பணம் கொடுக்கவோ முடியும் என்று சொல்லுகிறார். இதை அவரால் புரிந்துகொள்ள முடியாது. 

அவருக்கு என்ன ஆச்சரியம் என்றால் அப்படி யோசிக்க விடாமல்தானே எல்லாரும் ஆட்சி செய்து கொண்டிருக்கிறோம் -  அப்படி இருக்கும்போது எப்படி இவர்களுக்கு போராட துணிச்சல் வந்தது? யார் பணம் குடுக்குறா? பணம் குடுத்தே ஆட்களை கூப்பிட்ட உங்களுக்கு அப்படித்தானே நினைக்கத் தோணும். இல்லைன்னா, உங்க பின்னாடி வர்ற தொண்டர்கள் யோசிக்க முடியாமத்தான் உங்க பின்னாடி வர்றாங்களா மகாராசா! 

ஒரு மக்கள் போராட்டத்தை எப்படி அணுக வேண்டும் என்கிற மிகச்சிறிய விஷயம் கூட  தேறாத நாம்தான் மாக்களுக்காக அரசு அரசுக்காக மக்கள் அல்ல என்று சொல்லுகிறோம். மிரட்டல் மற்றும் உருட்டல் வழியாக ஒரு போராட்டத்தை கலைக்க வேண்டும் என்று ஒரு அரசு நினைத்தால் - அது ஆங்கிலேய அரசு என்று சொல்வதில் தவறென்ன? 

வெளி நாட்டில் நாலு பேரு நாடு ரோட்டுல நின்னு ஒரு கொடி பிடிக்கிற செய்தியை ஒரு வெளிநாட்டு நிறுவனம் செய்தி எனத் தந்தால் காசு குடுத்து அந்தச் செய்தியை வாங்கி நம்ம ஊரு தொலைக் காட்சி நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு வெளியிடும். இங்கே நூற்றுக் கணக்கான மக்கள் வாழ்வாதரத்திற்காக போராடிக்கொண்டிருக்கும் போது அதை ஒரு ஓரத்திலும், சாமி சொல்வதை முதல் பக்கத்தில் போட்டு மக்களைக் கொச்சைப் படுத்துவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. அரசு இயந்திரங்கள் அப்படித்தான் இருக்கும். ஆனால் மீடியா அப்படி இருக்க முடியுமா? அவர்களை புரிந்து கொள்ளா விட்டாலும் பரவாயில்லை இழிவு படுத்தாமலாவது இருக்கலாம் அல்லவா. 

கொசுறு

"19. Protection of certain rights regarding freedom of speech, etc.-
  1. All citizens shall have the right-
    1. to freedom of speech and expression;
    2. to assemble peaceably and without arms;
    3. to form associations or unions;
    4. to move freely throughout the territory of India; ...."
                                                        FUNDAMENTAL RIGHTS  - INDIAN CONSTITUTION

7 comments:

  1. //எப்படிப் பணத்தை தண்ணியை செலவழித்தாலும் இப்படி தொடர் போராட்டத்துக்கு அழைத்தால் காங்கிரஸ் தொண்டர்கள் கூட வருவதில்லையே - அப்படின்னு கோவத்துல சொல்றாரா மாண்புமிகு அமைச்சர்?
    //
    காங்கிரஸ்லாம் ஒரு கட்சி ?.. விடுங்க பாஸ்

    ReplyDelete
  2. வணக்கம் அப்பு!
    கேவலம் ஒரு முக்கியமான போராட்டத்தை திசை திருப்புவதற்காக அரசியல்வாதிங்க செய்யும் அசிங்கத்த என்னன்னு சொல்வது..

    இப்படி அமைச்சர் பேசுவதையும் கேட்டுக்கொண்டிருப்போர்தான் காசு கொடுத்து கூட்டி வரப்பட்டவர்களாக இருப்பார்கள்!!??

    ReplyDelete
  3. துன்பம் அடைந்தவன் தன் கஷ்ட்டத்தை எப்பேர்பட்ட வார்த்தைகளால் கூறினாலும் அவன் நிலையை அவனைத் தவிர வேறு யாராலும் உணர இயலாது...

    வாய்க்கிலிய பேசுபவர்களின் ஒருவருடைய வீடும் 10KMக்குள் இல்லை என்பதால் அம்மக்களின் கவலை, வேதனை, உணர்வுகளை எப்படி பணம்திண்ணும் முதலைகளால் புரிந்து கொள்ளமுடியும்...

    மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை என்றாலும் அதை கொச்சைப்படுத்துவது மிக மட்டமான செயல்...

    அரசின் இந்த செயல் அம்மக்களின் உணர்வுகளை கொச்சைப் படுத்துவதாகவே உணர்கிறேன்...

    ReplyDelete
  4. என் கணினியில் வீடியோ தடை...

    பார்க்க முடியவில்லை... நண்பரே...

    ReplyDelete
  5. இந்த மூன்று மாத தாமத நாடகம் போராட்டத்தை நீர்த்துப்போக செய்யவும்...மக்களை மின் வெட்டு... மிரட்டல் மூலம் மனம் மாறச் செய்யவும் தான்...

    இந்தியாவின் தவறான அணு சார்ந்த அணுகுமுறைக்கு வித்திட்ட நாடுகள் எதையெல்லாம் இந்தியாவுக்கு அள்ளிக்கொடுத்தன என்று இந்த சாமிக்கு தெரியுமா?

    ReplyDelete
  6. @விக்கியுலகம்
    வாங்க மாமா
    அதான் தங்க பாலுவை காலி பண்ணிட்டாங்களோ!

    ReplyDelete
  7. வாங்க ஜி,
    வணக்கம்.
    உங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.

    ReplyDelete