Monday, 7 November 2011

சிறுதுளி: விஜய் அம்மா கலைஞர் !

இது விஜயின் அம்மா கலைஞரா என்று விவாதிக்கிற பட்டிமன்றம் அல்ல: இது விஜய் பற்றியும், அவரது அம்மா பற்றியும், நம்ம அம்மா பற்றியும், கலைஞர் பற்றியும், உள்ளடக்கிய சில செய்திகளையும் சில கேள்விகளையும் முன்வைக்கிற ஜாலியான பதிவு...
சில சீரியஸ் விஷயங்களை காமேடியாக்குவதே அவர்கள்தான் நாம் காமெடி பண்ணினால் தப்பா?

--------------------------
செய்தி: தமிழ்நாடு அரசு இசைப் பள்ளிகளுக்கான அறிவுரைஞராக ஷோபா சந்திரசேகரன் நியமனம்.

பாராட்டு - விஜயின் பாடும் திறனை வைத்தே அவரது தாய் எவ்வளவு பெரிய இசைமேதை என்று நாம் உணர்ந்துவிடலாம் அல்லவா?

கேள்வி: தமிழ்நாடு அரசு கலையியல் கல்லூரிகளின் அறிவுரைஞராக அடுத்த நியமனம் விஜய்யா?
---------------------------------------------------
  • செய்தி: மழையினால் ரோடுகள் குண்டும் குழியுமாய் இருக்கின்றன சீரமைக்க ஐநூறு கூடி ஆகும்.
  • கேள்வி: அவ்வளவுக்கும் ரோடு போட்டிருவீங்களா?
  • சந்தேகக் கேள்வி: கலைஞரின் ஊழல் சாலைகள் என்று ஏதாவது கேஸ் போடுவீங்களா?
----------------------------------------------------------------------
செய்தி:  அம்மா ஆறு அமைச்சர்களை அதிரடியாக நீக்கி புதிய அமைச்சர்கள் நியமனம்?

கேள்வி: ஆஹா! அம்மா மறுபடியும் ஆரம்பிச்சுட்டுங்களா?

சந்தேகக் கேள்வி:  ஏன் அவங்களை கலைஞர் கட்டி எழுப்பினாரா என்ன?

 ------------------------------------------------------------------------------------------------

செய்தி: தோனிக்கு ராணுவத்தில் கவுரவப் பதவி -

கேள்வி: இங்கிலாந்திடம் இங்கிலாந்தில் அடிபணிந்து இந்தியாவில் திருப்பிக் கொடுத்ததற்கா?
இந்தக் கவுரவ டாக்டர், கவுரவ ராணுவ வீரர் இதற்கெல்லாம் முடிவே கிடையாதா?

சந்தேகக் கேள்வி:   தோனி போரில் குண்டு போட்டால் பேட்டால்  தடுப்பீர்களா?
-----------------------------------------------------------------------------------------------------------
  • செய்தி: உலக மக்கள் தொகை 700 கோடியைத் தொட்டது...
  • கேள்வி: நிஜமாவா - செத்தவங்களைக் கழிச்சிங்களா இல்லையா?
  • சந்தேகக் கேள்வி: ரொம்பக் கம்மியாத் தெரியுதே - - நம் ஊழல் கோடிகளோடு ஒப்பிடுகையில்...
---------------------------------------------------------------------------------------------------------------

செய்தி: பொருளாதாரத் துறை வளர நிச்சயம் நமக்கு மிகப் பெரிய சக்தி தேவை, அதை நிறைவேற்ற நிச்சயம் நமக்கு அணுசக்தி அவசியம் என்று முன்னால் இந்தியக் குடியரசுத் தலைவர் கூறியுள்ளார். மேலும் கதிர் வீச்சு வெளிவராத வண்ணம் பாதுகாப்பாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

கேள்வி:  ஐயா ஏற்கனவே வளர்ந்திருக்கிற பொருளாதார வளர்ச்சியில் விளைந்த விலை வாசி உயர்வையே எங்களால் சமாளிக்க முடியலையே - இன்னும் வளர்ச்சியடைந்தா நாங்க என்னய்யா பண்ணுவோம்?

சந்தேகக் கேள்வி:  அய்யா ! உங்க பங்களாவை அங்கே வைச்சுக்குவீங்களா?
                 
                     -----------------------------------------------------------------------

தொடர்புடைய பதிவு:

அப்துல் கலாமும் அணு உலையும். 



5 comments:

  1. வளர்ச்சி என்பது ஒட்டுமொத்த சமுகம் வளரவேண்டும்.

    மாறாக... ஒரு குறிப்பிட்ட வர்கத்தினர் வளர்வதால் அடித்தட்டு மக்கள் இன்னும் அதலபாதாளத்துக்கு தள்ளப்படுவதா வளர்ச்சி?

    என்ன தேசமடா இது???

    ReplyDelete
  2. கேள்வி: ஐயா ஏற்கனவே வளர்ந்திருக்கிற பொருளாதார வளர்ச்சியில் விளைந்த விலை வாசி உயர்வையே எங்களால் சமாளிக்க முடியலையே - இன்னும் வளர்ச்சியடைந்தா நாங்க என்னய்யா பண்ணுவோம்?//

    செவில்ல அறைஞ்ச மாதிரி கேட்டீங்க கேள்வி சூப்பர், கலாம் அவர்களே யாருக்கு பயந்து இப்பிடி அறிக்கை விட்டீர்கள், போராட்டக்காரர்களை சந்திக்காமல் நீங்க அறிக்கை விட்டதே தவறு, அடுத்து பேரழிவு வரும் பட்சத்தில், மக்கள் உங்களையும் உங்கள் அறிக்கையையும் என்ன செய்வார்கள் என்பதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்....

    ReplyDelete
  3. @ராஜா MVS

    தமிழ் பத்தில் இணைத்ததற்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  4. //செய்தி: அம்மா ஆறு அமைச்சர்களை அதிரடியாக நீக்கி புதிய அமைச்சர்கள் நியமனம்?

    கேள்வி: ஆஹா! அம்மா மறுபடியும் ஆரம்பிச்சுட்டுங்களா?

    சந்தேகக் கேள்வி: ஏன் அவங்களை கலைஞர் கட்டி எழுப்பினாரா என்ன?

    //

    same doubt

    ReplyDelete
  5. முதலில் தாங்கள் எனது வலைப்பதிவில்
    இணைந்ததற்கு மிக்க நன்றி :)

    தங்கள் கேள்வியும்
    சந்தேக கேள்வியும் மிகவும் அருமை நண்பரே ...
    குறிப்பாக அந்த அமைச்சரவை மாற்றம் கேள்வி SUPER:)

    ReplyDelete