பழமொழிகள் இப்போது சொல்லப்பட்டால் என்ன உதாரணம் சொல்லுவது என்று ஆசிரியர்கள் கவலைப் பட வேண்டாம். அவர்களுக்கு உதவும் விதமாக சில பழமொழிகள்.
ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுதுச்சாம்
- உதாரணம் ஒன்று - தமிழக சட்ட சபையில் மூவர் மரணதண்டனைத் தீர்ப்பை நிறுத்தி வைக்க போட்ட தீர்மானம்.
- உதாரணம் இரண்டு - கூடங்குளம் அணுமின் நிலையம் அவகாசத் தீர்மானம்.
- இதுக்கு நல்ல பழமொழி - வேற இருக்கு
- ஆடுற மாட்டை ஆடிக் கற பாடுற மாட்டை பாடிக் கற .... கறந்துட்டான்களே உள்ளாதித் தேர்தல்ல! [ஐடியா திரு ராமராஜனா?]
தொட்டிலை ஆட்டி விடுவது - பிள்ளையையும் கிள்ளி விடுவது
- மூவர் தூக்குத்தண்டனை ரத்து செய்யக் கோரும் வழக்கைத் தள்ளு படி செய்ய தமிழக அரசு வழக்குத் தாக்கல்....
புலி பதுங்குவது பாய்வதற்கே
- உதாரணம் - உள்ளாட்சித் தேர்தல் வரை அமைதி காத்து இப்போது எல்லா வற்றின் விலையையும் கடுமையாக உயர்த்தி இருக்கும் தமிழக அரசு.
இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பானாம்
- பெட்ரோல் விலை உயர்வினால் சூடாகி இருந்த மக்களுக்கு ஓங்கி அடி - பால் விலை உயர்வு ... பேருந்துக் கட்டணம் உயர்வு.... ரெயில் கட்டணம் உயர்வு ...
- சம்பளம் ??????????????????????????????'..
- எல்லாத்தையும் தாங்கிக்கிரீங்களே - நீங்க ரொம்ப நல்லவங்க .....
முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்
- பொது நூலகங்களுக்கு புத்தகம் வாங்க இருபத்தி ஐந்து கோடி மற்றும் கட்டிடங்களுக்கு இருபத்தி ஐந்து கோடி முதல்வர் அறிவிப்பு..
கோழி மிதித்து குஞ்சு சாகுமா! அம்மா மிதித்து ...
- மாற்றான்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு ஒரு பைசா கூட கொடுக்காத நிலையில் தமிழக 'மக்களே' [குழந்தைகளே] உங்களிடம் இல்லமால் வேறு எங்கே போகமுடியும். சொந்தத் தாய்க்குரிய கருணையோடு நடந்து கொள்ள விலை உயர்வு தவிர்க்கப் பட முடியாததாகி விட்டது.
கரையான் புற்று பாம்புக்கு உதவுமாம் -
- விலைவாசி யுர்வுக்கு கலைஞர் அரசே காரணம் - முதல்வர் குற்றச் சாட்டு.
- கலைஞரின் புற்று அம்மாவுக்கு நன்றாக உதவுகிறது...
இதனால்தெரிந்து கொள்ள வேண்டியது:
- பசுத்தோல் போர்த்திய புலி
- உதாரணம் - சொல்லனுமா என்ன?
- பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.
- விலை வாசி உயர்வுக்கு எதிராக சில கட்சிகள் போராட்டம்...
- "வெளுத்ததெல்லாம் பாலல்ல."
- 'கள்ளா' இருக்கணும்னு அவசியம் இல்லை -
- சுண்ணாம்பாக் கூட இருக்கலாம்.
- பால் உடலுக்கு நல்லதல்ல
- பிரயாணம் உடலுக்குக் களைப்பைத் தரும்
No comments:
Post a Comment